- Advertisement -
டிவி சேனல்களில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் விஜே அர்ச்சனா. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜே அர்ச்சனா நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய விஜே அர்ச்சனா கூறியதாவது, என்னை நானே பேட்டி எடுத்தால் முதலில் என்கிட்ட நீ சந்தோஷமா இருக்கிறாயா? என்ற கேள்வியை தான் கேட்பேன். வாழ்க்கையில் மனநிறைவு இருக்கு. ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்திருக்கு. ஆனால் உண்மையான சந்தோசம் இல்லை. அந்த பழைய அர்ச்சனா இப்போ இல்லை. நம்முடைய எல்லா கடமையையும் சரியாக முடித்துவிட்டு மேலே போகும் போது தான் அந்த சந்தோஷம் கிடைக்கும் என்று விஜே அர்ச்சனா ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





