- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன். என்னால விஜய்க்கு வில்லனாலாம் நடிக்க முடியாது என...

நான் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் நடிப்பேன். என்னால விஜய்க்கு வில்லனாலாம் நடிக்க முடியாது என கூறி, நல்ல வாய்ப்பை மறுத்த நடிகர்

- Advertisement -

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்க த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அர்ஜூன் ஒரு டெரிஃபிக் வில்லனாக நடித்து வருகிறார். அதே போல் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோரும் கேங்கஸ்டர்களாக வருகிறார்கள் என கூறப்படுகிறது.

சமீப காலமாக பல முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் வில்லனாக நடித்து வருகிறார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிஷ்கின் “சவரக்கத்தி” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின் தற்போது “லியோ”, “மாவீரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இது போன்று முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் வில்லனாக நடித்து வரும் நிலையில் 80களில் டாப் நடிகராக இருந்த ஒருவர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆம்!

விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தெறி”. இத்திரைப்படத்தை அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க மொட்டை ராஜேந்திரன், நைநிகா ஆகிய பலரும் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் விஜய்யின் கெரியரில் முக்கிய மாஸ் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிகர் மோகனை நடிக்க வைக்கலாம் என படக்குழு அவரை அணுகியதாம்.

ஆனால் தான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என மோகன் கூறிவிட்டாராம். ஆதலால்தான் மகேந்திரன் அக்கதாப்பாத்திரத்தில் நடித்தாராம். மோகன் தற்போது “ஹரா” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்