- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் சினேகா கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியவர் இவரா? அவங்க நடிச்சிருந்தா இன்னும்...

தி கோட் படத்தில் சினேகா கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியவர் இவரா? அவங்க நடிச்சிருந்தா இன்னும் வேற லெவல்தான் – படம் பார்த்துட்டு போன்ல அப்படி சொல்லி இருக்காங்களே?

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் கடந்த 5 நாட்களில் 315 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் 125 கோடி ரூபாய்க்கு படம் வசூலில் கடந்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் மிலாடி நபி போன்ற பண்டிகை நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை பொருத்த வரை இந்தி மற்றும் தெலுங்கில் போதிய வரவேற்பை, ஆதரவை தி கோட் பெறவில்லை. மிகவும் குறைவான வசூல் என்பதுடன் படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் மிக அதிகமாக உள்ளன. இதற்கு காரணம் படத்தில் சிஎஸ்கே கிரிக்கெட் அணியை காட்டியதுதான் என்று இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

மும்பை, பெங்களூரு கிரிக்கெட் அணிகளுக்கு ஆதரவான ரசிகர்கள், நிச்சயமாக தி கோட் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை செய்வார்கள், அவர்களுக்கு சிஎஸ்கே அணியை படத்தில் காட்டியது பிடிக்கவில்லை என்றாலும், சிஎஸ்கே அணியின் ரசிகன் என்பது என் ரத்தத்தில் ஊறியது. அதற்காக ஒன்றும் செய்ய முடியாது என்று இயக்குனர் வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மேலும் தி கோட் படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சினேகா, நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதாவது அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்த விஜய்க்கு சினேகா ஒரு கேரக்டருக்கு மனைவியாகவும், மகன் கேரக்டருக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை, வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு, சினேகா கேரக்டரில் முதலில் நான் நடிக்க வைக்க நினைத்தது நடிகை நயன்தாராவை தான். ஆனால் அது சில விஷயங்களில் சரியாக வரவில்லை. அதனால்தான் அந்த கேரக்டரில் நடிகை சினேகா நடித்தார்.

தி கோட் படம் வெளியான பிறகு, படத்தை பார்த்த நயன்தாரா எனக்கு போன் செய்தார். சினேகா சாய்ஸ்தான் சரி, அவர் அவ்வளவு அழகாக நடித்துள்ளார் என்று பாராட்டினார் என்று அந்த நேர்காணலில் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். நயன்தாரா நடித்திருந்தால் இன்னும் படத்துக்கு மாஸ் கிடைத்திருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்