- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகையின் காலணிகளை அதிகாரி கையில் எடுத்துச் சென்ற விவகாரம் - ஆந்திர அரசியலில் விஸ்வரூபம் எடுக்குமோ…?

நடிகையின் காலணிகளை அதிகாரி கையில் எடுத்துச் சென்ற விவகாரம் – ஆந்திர அரசியலில் விஸ்வரூபம் எடுக்குமோ…?

- Advertisement -

ஆந்திரா, சித்தூரைச் சேர்ந்தவர் நடிகை ரோஜா. ஆர்கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், பிரபுதேவா, அர்ஜூன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சூரியன், ராசய்யா, ஆயுதபூஜை, இந்து, வீரா, தமிழ் செல்வன், ஏழையின் சிரிப்பில், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பரம்பரை, உழைப்பாளி போன்ற பல படங்களில், நாயகியாக நடித்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு காவலன், சகுனி போன்ற படங்களில் அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்தார். இப்போதும், சினிமாவில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இயக்குநர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், செல்வமணி – ரோஜா தம்பதிக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் ரோஜாவின் மகளும் விரைவில் சினிமாத்துறைக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

சினிமாவைத் தொடர்ந்து, அரசியல் ஆர்வம் காரணமாக ரோஜா, தீவிர அரசியலில் ஈடுபட்டார். ஆந்திராவில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஆளுங்கட்சி ஆட்சியில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக ரோஜா வெட்டவெளியாக உள்ள ஒரு பகுதியில் சிறிது தூரம் காலணிகள் அணிந்தபடி நடந்து சென்றிருக்கிறார். குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு, காலணிகளை கழட்டிவிட்டு நடந்திருக்கிறார். அப்போது பின்னால் வந்த அரசுத்துறை அதிகாரி ஒருவர், ரோஜாவின் காலணிகளை கையில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அமைச்சர் ரோஜா, காலணிகளை எடுத்துக்கொண்டு பின்தொடருமாறு யாரிடமும் கூறவில்லை. ஆனால், அருகில் காலணிகளை எடுத்தபடி வரும் அந்த அதிகாரியை பார்த்த பிறகாவது, அதை தவிர்க்குமாறு கூறி இருக்கலாம். நடிகை, அமைச்சர் என்ற நிலையில் இருந்தாலும் ஒரு அரசு அதிகாரி தன் காலணிகளை எடுத்து வருவதை பார்த்த உடனே, அதை தடுத்திருக்க வேண்டும் என, சமூக வலைதளங்களில் இப்பிரச்னை வைரலாகி வருகிறது. இது தேர்தல் நேரத்தில், அரசியலிலும் விஸ்வரூபம் எடுக்குமோ, என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்