- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்த டைரக்டர்களுக்கு அதெல்லாம் வேணும், எனக்கு இது ஒன்றே போதும், தனது படங்கள் குறித்து ஓபனாக...

மத்த டைரக்டர்களுக்கு அதெல்லாம் வேணும், எனக்கு இது ஒன்றே போதும், தனது படங்கள் குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் சுந்தர் சி – ரொம்ப விவரமான ஆளா இருக்காரே பா!

- Advertisement -

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சுந்தர் சி. பிறகு உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கார்த்திக், ரம்பா, மணிவண்ணன், ஜெய் கணேஷ், கசன்கான், கவுண்டமணி செந்தில் ஜோதிமீனா பாண்டு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து முறைமாமன், மேட்டுக்குடி, அருணாசலம், அன்பே சிவம், ரெண்டு, வின்னர், கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 என பல படங்களை இயக்கிய சுந்தர் சி, வெற்றிப் பட இயக்குனராக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார். காதல், காமெடி கலந்த இவரது ஜானர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன.

- Advertisement -

இப்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர் சி, தனது படங்கள் வெற்றி பெறும் காரணம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில் சுந்தர் சி கூறியதாவது, மற்ற இயக்குனர்களுக்கு இல்லாத ஒரு வசதி எனக்கு இருக்கிறது. இப்போ இருக்கிற பெரிய டைரக்டர்களுக்கு இருக்கிற பிரச்னை என்ன என்றால், அவர் பெரிய டைரக்டராக இருந்தாலும் அவருக்கு பெரிய ஹீரோ வேண்டும், பெரிய ஹீரோயின் வேணும், இசையமைப்பாளர் வேணும், பெரிய கேமராமேன் வேணும், பெரிய பேனர் இதெல்லாம் வேண்டும்.

- Advertisement -

ஆனால் எனக்கு எதுவுமே தேவையில்லை. நான் தைரியமாக சொல்வேன். சுந்தர் சி என்ற அந்த பெயர் மட்டும் போதும். அந்த அடையாளம் மட்டுமே என் படத்துக்கு போதும். கடந்த 20 ஆண்டுகளில் எனக்கு கிடைத்த வரம் அது என்று நினைக்கிறேன். நாளைக்கே ஒரு படம் எடுக்க வேண்டும் என்றாலும், இருக்கிற நடிகர், நடிகைகளை வைத்து என்னால் படம் பண்ண முடியும்.

கலகலப்பு 2 மாதிரி, கலகலப்பு 3 படத்தை பண்ண முடியும். அவர்களுக்கு மார்க்கெட் இருக்கா, இல்லையா என்பதெல்லாம் வேற விஷயம். அந்த ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் கரெக்டாக இருக்கிறார்கள் என்றால் என்னால் அந்த படத்தை பண்ண முடியும். அந்த வகையில் மார்க்கெட் என்னுடைய படத்துக்கு இருக்கிறது என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்