- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடல் வரிகளை எடக்குமடக்காகப் போட்டு கலைஞரிடம் கடி வாங்கிய தேவா, இப்படி வாண்டடாவா வண்டில ஏறுறது?

பாடல் வரிகளை எடக்குமடக்காகப் போட்டு கலைஞரிடம் கடி வாங்கிய தேவா, இப்படி வாண்டடாவா வண்டில ஏறுறது?

- Advertisement -

தேனிசைத் தென்றல் என்று அன்போடு அழைக்கப்படுபவரான இசையமைப்பாளர் தேவா, தமிழ் இசையுலகின் தவிர்க்கமுடியாத இசை கலைஞனாக திகழ்ந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு பல ஹிட் ஆல்பங்களை கொடுத்த தேவா, கானா பாடல்கள் மூலம் மிகப் புகழ்பெற்று விளங்கினார்.

தமிழ் இசை உலகில் கானா பாடல்களுக்கான அடையாளமாக திகழ்ந்தவர் தேவா. அதுமட்டுமல்லாது மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களையும் பாடியுள்ளார். “மான் கராத்தே” படத்தில் அனிருத் இசையில் “ஓப்பன் தி டாஸ்மாக்” என்ற பாடலை பாடியிருக்கிறார் தேவா.

- Advertisement -

அதே போல் ஜிவி பிரகாஷ் இசையில் “தெறி” படத்திலும், சந்தோஷ் நாராயணன் இசையில், “கர்ணன்” படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “மாமன்னன்” திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் தேவா. இதே போல் ஹிப் ஹாப் தமிழா, சான் ரோல்டன் போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையிலும் தேவா பாடியுள்ளார்.

இந்த நிலையில் தேவா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் கலைஞர் வசனம் எழுதிய திரைப்படத்தில் இசையமைத்தது குறித்த அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

கலைஞரின் வசனத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “பெண் சிங்கம்”. இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதில் ஒரு பாடலுக்கு ட்யூன் போட்டு கலைஞரின் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார் தேவா. கலைஞர் தனது வீட்டில் இருந்தே அந்த ட்யூனுக்கு பாடல் எழுதி அனுப்பினாராம். அந்த வரிகளுக்கும் ட்யூனுக்கும் சந்தம் மிகவும் பொருத்தமாக இருந்ததாம்.

அதே போல் ஒரு பாடலுக்கு “சிந்தாதிரிபேட்டை சிரிக்கி” என்று ஒரு பல்லவியை தேவா பாடிக்காட்டினாராம். அதற்கு கலைஞர், “தேவா, சிந்தாதிரிபேட்டை என்னோட தொகுதி தேவா, இப்படி பாட்டு வச்ச எப்படிப்பா” என கலகலப்பாக கேட்டாராம்.

- Advertisement -

சற்று முன்