நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் ஆகிய 4 நட்சத்திர நடிகர்களும்தான் தமிழ் சினிமாவில் வருமானத்தை கொட்டித் தருகின்றனர். பிளாப் படங்களை தந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தராத நடிகர்களாக உள்ளனர்.
முன்பெல்லாம் கதைக்கான ஹீரோக்களை தமிழ் சினிமாவில் தேடினார்கள். இப்போது நட்சத்திர ஹீரோக்களுக்கான கதைகளை இயக்குனர்கள் உருவாக்குகின்றனர். அதாவது உடலுக்கான அளவில் சட்டை தைப்பதில்லை. சட்டைக்கான உடல் அளவை உருவாக்கும் முரண்பட்ட நிலைதான் தமிழ்ச சினிமாவில் காணப்படுகிறது.
அதிலும் நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் விரும்பும் நடிகராக மட்டுமின்றி சினிமாத்துறை சார்ந்த இயக்குனர்கள், சக நடிகர்கள் ரசிக்கும் ஒரு சிறந்த நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கிய போதே, அதில் பணிபுரிந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அப்போதே அஜீத்குமாரிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார். கதை நன்றாக இருப்பதாக பாராட்டி அஜீத், ஒரு ஹிட் படம் கொடுங்கள். நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று கூறியிருக்கிறார். அதே போல் மார்க் ஆண்டனி வெற்றிப்படத்தை கொடுத்தவுடன் தனது குட்பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வந்துவிட்டார்.
குட்பேட் அக்லி படப்பிடிப்பு சிறப்பாக முடிந்துவிட்ட நிலையில் இப்போது அஜீத்குமார் டப்பிங் பேசி வருகிறார். மேலும் இன்னொரு படம் நாம் இருவரும் இணைந்து செய்வோம். அதற்குள் மார்க் ஆண்டனி 2 படத்தை முடித்துவிட்டு வாருங்கள், நானும் துபாய் கார் ரேஸை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு உருக்கமான பதிவை செய்துள்ளார். அதில், ஒவ்வொரு வருடமும் நான் அஜித் சார் குரலை தியேட்டரில் கேட்க காத்திருப்பேன். இப்போது கடவுள், பிரபஞ்சம் மற்றும் அஜித் சார் ஆகியோர் அனுமதித்ததால் நான் அவர் டப்பிங் செய்வதை நேரில் கேட்க முடிந்தது. இந்த வருடம் தொடங்கியதும் முடிவதும் குட் பேட் அக்லி என்ற அழகிய பயணத்துடன்தான். இந்த நினைவுகள் எப்போதும் என் மனதில் இருக்கும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் சார். லவ் யூ சார் என்று ஆதிக் ரவிச்சந்திரன் அந்த எக்ஸ் பதிவின் கூறி இருக்கிறார்.





