- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் 3வது முறையாக அந்த நட்சத்திர ஜோடி இணைகிறார்களா? போடு வெடிய,...

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் 3வது முறையாக அந்த நட்சத்திர ஜோடி இணைகிறார்களா? போடு வெடிய, அப்போ அந்த விவகாரம் முடிவுக்கு வந்துடுமுன்னு சொல்லுங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த மணிரத்னம் இந்திய அளவில் ஒரு சிறந்த இயக்குனராக கவனிக்கப்படுபவர். தொடர்ந்து பாராட்டுகளை பெறுபவர், பல விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி, நாயகன், அக்னி நட்சத்திரம், ஆயுத எழுத்து, ராவணன், குரு, உயிரே, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, மின்சார கனவு என மணிரத்னம் இயக்கிய பல படங்கள், பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. 2 ஆண்டுகளுக்கு முன் கல்கி படைத்த நாவல் பொன்னியின் செல்வன் கதையை 2 பாகங்களாக படமாக எடுத்திருந்தார்.

- Advertisement -

தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக்லைப் படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சிம்பு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கமல் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியானது. வருகிற 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி தக்லைப் படம் வெளியாக உள்ளது. நாயகன் படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் கமல் இணைந்துள்ள இந்த படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்லைப் படத்தை அடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நட்சத்திர தம்பதியான அபிஷேக் பக்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் இந்தியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகலாம்.

- Advertisement -

இந்தி திரையுலகில் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் குரு மற்றும் ராவணன் ஆகிய 2 படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது நட்சத்திர தம்பதி இணையும் 3வது படமாக இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா இருவரும் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சூழ்நிலையில் மணிரத்னம் இயக்கும் படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்தால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்