- Advertisement -
Homeபொழுதுபோக்குகருணாநிதி 100 விழா பஞ்சாயத்து இன்னுமா தீரலை? இப்படி கலைஞர் டிவி பெயரை சொல்லி...

கருணாநிதி 100 விழா பஞ்சாயத்து இன்னுமா தீரலை? இப்படி கலைஞர் டிவி பெயரை சொல்லி ஊத்தி மூடுறது நியாயமா – என்ன கொடும சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவிலும், அரசியலிலும் அவர் தனது பங்களிப்பை திறம்பட செய்திருக்கிறார். திமுக கட்சி தலைவராகவும், திரைப்பட வசன கர்த்தாவாகவும் கருணாநிதி பல வெற்றிகளை பெற்றவர். மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தந்தவர்.

அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடியது போல, தமிழ்நாடு திரைப்பட துறை சார்பாகவும் கருணாநிதிக்கு விழா எடுத்து சிறப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்ஸி அமைப்பு உள்ளிட்ட 5 அமைப்புகள் சார்பில் கலைஞர் 100 விழா நடத்த முடிவானது.

- Advertisement -

கடந்த டிசம்பர் 24ம் தேதி இவ்விழாவை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த முடிவான போது, சென்னை கனமழையில் மூழ்கியதால் தேதி ஜனவரி 8ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு கலைவாணர் கலையரங்கம் என முடிவாகி, அதன்பின்னர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவை பொருத்தவரை சொதப்பல்களும், குளறுபடிகளுமே முன்னிலை பெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமே விழாவில் பெரிய நடிகர்களாக கலந்துக்கொண்டனர். சூர்யா, கார்த்தி, வடிவேலு, யோகி பாபு போன்ற சில கலைஞர்களும் பங்கேற்றனர். சத்யராஜ், டி ராஜேந்தர் போன்றவர்கள் வந்துவிட்டு, 10 வரிசைகளுக்கு பிறகு தங்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்ததால், வெறுத்துப் போய் திரும்பிச் சென்றுவிட்டனர்.

- Advertisement -

விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் பேசிய போது பார்வையாளர்கள் பக்கம் வெறும் காலி சேர்களை பார்த்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற ஒரு சூழலில் அவர்கள் பேசியதே இல்லை. இதற்கிடையே இப்போது மற்றொரு பஞ்சாயத்துக்கும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதாவது கலைஞர் 100 விழா முடிந்து ஒரு மாதமான நிலையில், இன்னும் விழா நடந்த ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்கு இன்னும் வாடகை பணம் கொடுக்கவில்லை. அதேபோல் விழா மேடையில் தொழில் முறையில் பங்கேற்று நடனமாடிய கலைத்துறை சாராத நடனக் கலைஞர்களுக்கு இன்னும் சம்பளமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து விழா அமைப்பினரிடம் கேட்டால், கலைஞர் டிவியில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ரூ. 10 கோடி வரை பணம் வரவேண்டியுள்ளது. அந்த தொகை வந்த பிறகுதான் வாடகை, சம்பளம் எல்லாம் பட்டுவாடா செய்வோம் என்று, கலைஞர் டிவி மீது பழியை போட்டுள்ளனர் அந்த விழாவை நடத்திய நிர்வாகிகள்.

- Advertisement -

சற்று முன்