- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதுக்காக வீணா கவலைப்படறீங்க? - நடிகர் சூர்யா சொன்ன ஒரு சிம்பிள் லாஜிக், அசந்து போய்...

எதுக்காக வீணா கவலைப்படறீங்க? – நடிகர் சூர்யா சொன்ன ஒரு சிம்பிள் லாஜிக், அசந்து போய் அவரை பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

பொது வாழ்வில் ஜெயித்த மனிதர்கள் பலரும் நல்ல சிந்தனையாளர்களாக இருக்கின்றனர். வாழ்க்கையின் உச்சம் தொட அவர்களது தெளிவான சிந்தனையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. நல்ல நடிகராக மட்டுமின்றி நல்ல சிந்தனையாளராகவும் இருப்பவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார்.

இப்போது 85 வயதான நிலையிலும் சுறுசுறுப்பாக காணப்படும் அவர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய கூட்டங்களில் சினிமா விழாக்களில் பங்கேற்று பேசி வருகிறார். தனது சினிமா பயணம் குடும்ப வாழ்க்கை உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் குறித்து பல அற்புதமான தகவல்களை கூறி வருகிறார்.

- Advertisement -

அதே போல் அவரது மூத்த மகன் நடிகர் சூர்யாவும் தெளிவான ஒரு சிந்தனையாளராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நடிகர் சூர்யா தற்போது கருப்பு படம் மூலம் சூப்பர் கம்பேக் தந்திருக்கிறார்.

கருப்பு படம் அபார வெற்றியை பெற்று 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் மொத்தம் 191 கோடி ரூபாய் என்ற அளவில் அபாரமான வசூலை எட்டியிருக்கிறது. இதனால் நடிகர் சூர்யா பழைய இமேஜூக்கு வந்துவிட்டார் என்று தாராளமாக சொல்லலாம். அவரது ரசிகர்களும் இதனால் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

இன்றைய மனித சமூகத்தில் யாராவது நண்பர்கள் உறவினர்கள் காயப்படுத்தும் விதமாக பேசிவிட்டால் அதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் சிலர் அப்செட்டாக இருந்து விடுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் பேசிய நடிகர் சூர்யா சிறந்த ஆலோசனையை கூறியிருக்கிறார். நடிகர் சூர்யா கூறியதாவது, உங்க பேங்க் அக்கவுண்ட்டுல இருக்கிற 86,400 ரூபாயில் யாராவது 10 ரூபாய் எடுத்து விட்டால் மீதி பணத்தை அப்படியே தூக்கி வீசிடுவீங்களா? வீச மாட்டீங்க இல்லே?

அதேபோல தான் ஒரு நாளில் 86,400 நொடிகள் நம்மிடம் உள்ளது. யாரோ ஒருத்தர் 10 செகண்ட் உங்களை காயப்படுத்திட்டாங்கன்னு உங்களுடைய ஒட்டுமொத்த நாளையும் அதையே நினைத்து நினைத்து வீணடிச்சிடாதீங்க. அந்த நெகட்டிவிடியை கடந்து எப்போதும் பாசிட்டிவா இருங்க. அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்க என்று நடிகர் சூர்யா அந்த நிகழ்ச்சியில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார். உண்மையிலேயே இது பின்பற்ற வேண்டிய அறிவுரைதான் என்று ரசிகா்கள் நடிகர் சூர்யாவை பாராட்டுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்