- Advertisement -
Homeபொழுதுபோக்குமாதம் ஒருமுறை இந்த விரதம் இருந்து பாருங்க - இயக்குனர் சமுத்திரக்கனி செய்த வேற லெவல்...

மாதம் ஒருமுறை இந்த விரதம் இருந்து பாருங்க – இயக்குனர் சமுத்திரக்கனி செய்த வேற லெவல் அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் சமுத்திரக்கனி. ஆரம்பத்தில் இயக்குனர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த அவர் பிறகு நெறஞ்ச மனசு என்ற படம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே விஜயகாந்த் படமாக அமைந்தது.

அடுத்து இயக்குனர் சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து சசிக்குமார் ஹீரோவாக நடித்த நாடோடிகள் படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். சுப்ரமணியபுரம் நாடோடிகள் என 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.

- Advertisement -

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி, நல்ல சமுதாயக் கருத்துள்ள படங்களை தந்து வருகிறார். குறிப்பாக அவரது படங்கள் எல்லாமே ஒருவித சமூக விழிப்புணர்வு படங்களாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி மொபைல் போன்கள் பயன்பாடு குறித்து பேசியிருக்கிறார். ஆபாச பதிவுகளும் மோசமான தகவல்களும் நிரம்பியுள்ள மொபைல் போன்கள் பயன்பாட்டை தவிர்ப்பதே உடல் மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளை உணவு சாப்பிடாமல் கூட பலர் இருந்து விடுகின்றனர். ஆனால் ஒரு மணி நேரம் மொபைல் போன் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றால் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு சுவாசிப்பதை போல மொபைல் போன் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. எந்நேரமும் பலர் மொபைல் போன்களில் மூழ்கி விடுகின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, வெள்ளிக்கிழமைகளில் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது போல் மாதத்துக்கு ஒரு முறை மொபைல் ஃபோன்களை பயன்படுத்தாமல் டிஜிட்டல் விரதம் இருங்கள். இந்த டிஜிட்டல் விரதத்தை இருந்து பாருங்கள். உங்கள் முகமும் மனதும் மிகவும் அழகாக மாறிவிடும் என்று இயக்குனர் சமுத்திரக்கனி அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்