- Advertisement -
Homeபொழுதுபோக்குசாரே… கொல மாஸ் சாரே… பட்டாசு கிளப்பிய லால் சலாம் மொய்தீன் பாய் - சும்மா...

சாரே… கொல மாஸ் சாரே… பட்டாசு கிளப்பிய லால் சலாம் மொய்தீன் பாய் – சும்மா அதிருதுல்ல – படம் வேற லெவலில் இருப்பதாக ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் இன்று காலை ரிலீஸ் ஆனது. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் இன்று ரிலீஸ் ஆனது.

நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில், கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். ரஜினிகாந்த் கெஸ்ட் அப்பியரன்ஸ் இந்த படத்தில் 53 நிமிடங்கள் வருவதால், இது ரஜினி படமாகவே இருக்கும் என்று ரசிகர்கள் முழுமையாக நம்பலாம்.

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை என்ற 2 படங்களை இயக்கி இருந்தார். ஆனால் அந்த படங்கள் சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில், லால் சலாம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று அவர், ஆடியோ லான்ச் விழாவில் குறிப்பிட்டு பேசினார்.

இதற்கிடையே படத்தின் கதாநாயகியாக நடித்த தன்யா பாலகிருஷ்ணன், பல ஆண்டுகளுக்கு முன் தமிழர்களை இழிவாக பேசினார் என்ற ஒரு விமர்சனமும் எழுந்தது. காவேரி தண்ணீர் விவகாரத்தில், தமிழர்களை அவமதிக்கும் விதமாக பேசிய அவர்தான், படத்தின் ஹீரோயினாக நடிக்க கிடைத்தாரா என விமர்சனம் எழுந்த நிலையில், தன்யா பாலகிருஷ்ணன் நான் அப்படி பேசவே இல்லை. அது நான் இல்லை. இருந்தாலும், என் பெயரில் நடந்த அந்த தவறுக்காக, அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு, அறிக்கை வெளியிட்டார்.

- Advertisement -

இன்று லால் சலாம் படம் ரிலீஸ் ஆன நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். படம் பாதி வரை சூப்பராக இருக்கிறது. அதன்பிறகு செகன்ட் ஆப் வேற லெவலில் இருக்கிறது. சூப்பரான ரஜினி படமாக இது இருக்கிறது. விரைவில், ஐஸ்வர்யா தனது அப்பாவை வைத்து முழு ஆக்சன் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளனர்.

தற்போதைய தமிழ் சினிமாவில் பர்ஸ்ட் ஆப் நன்றாக இருக்கும் பல படங்கள் செகன்ட் ஆப் நன்றாக இருக்காது. ஆனால், லால் சலாம் பர்ஸ்ட் ஆப், செகண்ட் ஆப் என இரண்டுமே சூப்பராக இருக்கிறது. ரஜினி கொல மாஸ் காட்டியிருக்கிறார். அதுவும் செகன்ட் ஆப் வேற லெவலில் இருக்கிறது என பாராட்டி வருகின்றனர். படத்துக்கு பாசிட்டிவ் ஆன ரிசல்ட் கிடைத்து வருவதால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்