- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேக்கலாமா?, அதையெல்லாம் வெளியே சொல்லி எனக்கு பழக்கமில்லே -...

என்னை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேக்கலாமா?, அதையெல்லாம் வெளியே சொல்லி எனக்கு பழக்கமில்லே – புலியாக சீறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

- Advertisement -

அட்டக்கத்தி, ரம்மி, காக்கா முட்டை, கனா, வடசென்னை, நம்ம வீட்டுப்பிள்ளை, பண்ணையாரும் பத்மினியும், டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை என பெயர் வாங்கியவர்.

இப்போது தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான காட்சிகளில், அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை. பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக நல்ல கேரக்டர்களில் மட்டுமே அவர் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸ்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது சுழல் 2 என்ற வெப்சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த சீரிஸ் ஷூட்டிங், பாண்டிச்சேரியில் நடந்தது. தாம்பரத்தில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் உங்களை போன்றவர்கள் கேபிஒய் பாலா போல ஏன் உதவ முன்வருவது இல்லை? கேப்டனுக்கு ஏன் நினைவஞ்சலி செலுத்த வரவில்லை போன்ற பல கேள்விகளை கேட்டதால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் பயங்கர டென்சனாகி விட்டார்.

- Advertisement -

பிறருக்கு உதவுவது நல்ல விஷயம்தான். யாராவது ஒருவர் உதவி செய்தால் அவரை பாராட்ட வேண்டும். அதை வைத்து மற்றவரை கேள்வி கேட்கக்கூடாது. நானும் சமுதாயத்துக்கு பல உதவிகள் செய்துள்ளேன். ஆனால் அதை எல்லாம் வெளியே சொல்கிற பழக்கம் என்னிடம் இல்லை. விளம்பரம் செய்தால் மட்டும்தான் உதவி செய்கிறோம் என்று அர்த்தம் என்று இல்லை. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்ததால், இங்கு வரமுடியவில்லை என்று கூறினார்.

அதன்பின், தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று சென்று ஐஸ்வர்யா ராஜேஷ் அஞ்சலி செலுத்தினார். கேப்டனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசை கடைசி வரை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இத்தனை மக்கள் அவரை காண வந்தது, அவரது செய்த நல்ல விஷயங்கள்தான் அதற்கு காரணம், என்றும் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

- Advertisement -

சற்று முன்