- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கில் பிஸியான நடிகையாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ், குவியுது பட வாய்ப்புகள் - இதுதான் காரணமா?...

தெலுங்கில் பிஸியான நடிகையாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ், குவியுது பட வாய்ப்புகள் – இதுதான் காரணமா? ஆதங்கப்பட்ட தமிழ் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழில் அட்டக்கத்தி படத்தில் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன்பே சன் டிவியில் அசத்தப் போவது யாரு என்ற காமெடி ஷோவில் தொகுப்பாளராக பணிசெய்திருக்கிறார். அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக பண்ணையாரும் பத்மினியும் ரம்மி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு காதலியாக நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு பெரிய அளவில் கவனத்தை வரவேற்பை பெற்றுத் தந்த படம் காக்கா முட்டை. இதில் 2 சிறுவர்களின் தாயாக அவரது நடிப்பு வேற லெவலில் பாராட்டை பெற்றது.

அடுத்து சாமி 2 திருடன் போலீஸ் ஆறாது சினம் ஹலோ நான் பேய் பேசறேன் மனிதன் தர்மதுரை கட்டப்பாவ காணோம் வடசென்னை கனா நம்ம வீட்டுப் பிள்ளை க/பெ ரணசிங்கம் திட்டம் 2 டிரைவர் ஜமுனா என பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு தமிழ் படங்களில் அதிகமாக காணவில்லை.

நடிகைகள் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் திரிஷா போல கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு கட்டத்தில் தமிழில் நடிக்க படங்கள் வாய்ப்பு இன்றி அவரது மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அவர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சமீபத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சங்கராந்திக்கு வஸ்துனம் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் இரட்டை நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. சூப்பர் ஹிட் வெற்றிப் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தாய்மொழி தெலுங்குதான். அதுமட்டுமின்றி தெலுங்கு படங்களில் தாராள கவர்ச்சி காட்டி முத்தக்காட்சிகளில் நடிக்கவும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்வந்து இருப்பதால், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனால் அவரது தமிழ் சினிமா ரசிகர்கள்தான், ஆதங்கத்தில் உள்ளனர். தமிழில் ஹோம்லி லுக்கில் நடிக்கும் பல நடிகைகள் தெலுங்கு, இந்தி என சென்றுவிட்டால் கவர்ச்சியின் எல்லைக்கே செல்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.

சற்று முன்