- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் உடன் இனி வாழ முடியாது, கோர்ட்டில் மனுதாக்கல் செய்துவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட பதிவை...

தனுஷ் உடன் இனி வாழ முடியாது, கோர்ட்டில் மனுதாக்கல் செய்துவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட பதிவை பாருங்க – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?

- Advertisement -

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் திருமணம் கடந்த 2004ம் ஆண்டில் நடந்தது. ஐஸ்வர்யா, தனுஷை விட 5 வயது மூத்தவர் என்றாலும் இயக்குனர் கஸ்தூரி ராஜா, மகனின் விருப்பத்துக்காக சம்மதித்தார். ஆனால் எந்த இடத்திலும் ரஜினிகாந்த் சம்மந்தி என்று கஸ்தூரி ராஜா கெத்து காட்டியது இல்லை. தனுஷூம் சூப்பர் ஸ்டார் மருமகன் என்று காட்டிக்கொண்டதே இல்லை.

கடந்த 18 ஆண்டுகளாக தனுஷ்- ஐஸ்வர்யா தாம்பத்ய வாழ்க்கை நடத்திய நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இப்போது வளர்ந்த பிள்ளைகளாக, ரஜினி, கஸ்தூரிராஜா குடும்பத்தில் அடுத்த தலைமுறை வாரிசுகளாக இருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டில் தனுஷ் – ஐஸ்வர்யா தங்களது பிரிவை, டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

- Advertisement -

குடும்ப வாழ்வில் கணவன், மனைவிக்குள் இதுபோன்ற மனக்கசப்புகள், வேறுபாடுகள் வருவது சகஜம். நாளடைவில் பிரச்னை தீர்த்து இருவரும் சமாதானமாகி ஒன்று சேருவர் என எதிர்பார்த்த நிலையில், இப்போது இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா, 2004ம் ஆண்டில் நடந்த இந்த திருமணத்தையே ரத்து செய்து, செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போஸ்ட் செய்திருக்கிறார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு செய்துள்ள அந்த பதிவில் ஆரோக்கியமான உடல், மகிழ்ச்சியான மனம், மனித இதயம், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தினமும் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும். 8 மணி நேரம் தூங்க வேண்டும். 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 6 நிமிடம் தியானம், 5 நேரங்களில் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். 4 பிரேக் எடுக்க வேண்டும். 3 முறை ஆரோக்கியமான உணவு, நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும். தூங்கும் முன் 2 மணி நேரம் செல்போன் பார்க்க கூடாது. 1 முழு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டீன் ஏஜில் உள்ள தனது 2 வளர்ந்த பிள்ளைகள், அப்பா அம்மா பிரிவை வேதனையுடன் எதிர்கொள்கின்றனர். 73 வயதில் இருக்கும் முதியவர் ரஜினி, தன் மூத்த மகள் இனி கணவர் துணையின்றி வாழும் எதிர்காலம் குறித்து கவலைப்படுவார் என்பதை எல்லாம் கடந்து, உடல் ஆரோக்கியம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்துள்ள இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், குடும்பத்து மேல கொஞ்சமும் அக்கறை இல்லை, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று கலாய்த்து கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்