- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது இல்லாம, இனிமேல் அஜீத் படப்பிடிப்புக்கு யாரும் போக முடியாது, இதுபற்றி படக்குழுவினருடன் நேரில் பேசிய...

இது இல்லாம, இனிமேல் அஜீத் படப்பிடிப்புக்கு யாரும் போக முடியாது, இதுபற்றி படக்குழுவினருடன் நேரில் பேசிய அஜீத் – அஜர்பைஜானில் நடந்த சம்பவம்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்ப நாட்களில் சாதாரண புதுமுக நடிகரான இவர், நாளுக்கு நாள் நல்ல படங்களில் நடித்து, முக்கிய நடிகராக மாறினார். வாலி இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை, அங்கீகாரத்தை கொடுத்தது.

தொடர்ந்து அமர்க்களம், தீனா, சிட்டிசன், ஜனா, வரலாறு, கிரீடம், வில்லன், பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அஜீத்குமாருக்கு முன்னணி வரிசையில் இடம்பிடித்து கொடுத்தது. அதிலும் சிட்டிசன், பில்லா, வில்லன் படங்களில் மாறுபட்ட நடிப்பில் அஜீத்குமார் அசத்தி இருப்பார்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த வலிமை, துணிவு போன்ற படங்கள் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்தாண்டில் துவங்கப்பட வேண்டிய விடாமுயற்சி என்ற படம், அவரது தந்தை சுப்ரமணியன் மறைவால், தள்ளிப் போனது.

கடந்த மாதம் 4ம் தேதி முதல், மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார்.

- Advertisement -

அஜர்பைஜானில் நடந்துவரும் விடாமுயற்சி ஷூட்டிங்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு சோக சம்பவம் நடந்துவிட்டது. படத்தில் கலை இயக்குநர், அஜீத்குமாரின் நண்பரான மிலன் மாரடைப்பால் காலமானார். இது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அஜீத்குமார், தனது நண்பருக்கு ஏற்பட்ட முடிவை பார்த்து மனம் கலங்கிப் போனார்.

இதையடுத்து, விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த அனைவரையும் அழைத்து பேசிய அஜீத்குமார், ஒவ்வொருவரும் தனது உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரித்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது, முழு உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். என் படத்தில் பணி செய்பவர்களுக்கு இனி மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என, தெரிவித்துள்ளார். மேலும் இப்போது அஜர்பைஜானில் உள்ள படக்குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அஜீத் ஏற்பாடு செய்துவிட்டாராம்.

- Advertisement -

சற்று முன்