- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி ஷூட்டிங் திடீரென துபாய்க்கு மாற்றம், இதற்கான காரணம் கேட்டா காமெடியா தான் இருக்குது -...

விடாமுயற்சி ஷூட்டிங் திடீரென துபாய்க்கு மாற்றம், இதற்கான காரணம் கேட்டா காமெடியா தான் இருக்குது – ரஜினி, கமலை பார்த்தாவது திருந்துங்கப்பா

- Advertisement -

கடந்த 2 மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வந்தது. இதில் அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். படத்தை, இயக்குநர் மகிழ் திருமேனி டைரக்ட் செய்கிறார். கடந்த அக். 4ம் தேதி முதல் கடந்த நவ.17ம் தேதி வரை நான் ஸ்டாப்பாக ஷூட்டிங் நடந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, நவ. 18ம் தேதி படக்குழு சென்னை திரும்பியது.

அஜர்பைஜானில், ஜனவரி 30ம் தேதி வரை விடாமுயற்சி ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தொடர்ந்து ஷூட்டிங் நடத்தப்பட்டதால் டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினர் மனச்சோர்வு அடைந்தனர். இதையடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு, படப்பிடிப்பை தொடரலாம் என தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் கூறியதை அடுத்து, படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே விஜய் 68 படப்பிடிப்பு சென்னையில் நடந்துவரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜானுக்கு செல்ல முடிவாகியுள்ளது. சென்னையில் மீதமுள்ள காட்சிகளை எடுத்துவிட்டு அடுத்தகட்டமாக அஜர்பைஜான் செல்ல இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பை தொடர்ந்து அஜர்பைஜானில் நடத்த திட்டமிட்டிருந்த விடாமுயற்சி படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை துபாய்க்கு மாற்றியுள்ளது. இதற்கு காரணம் கேட்டால், விஜய் 68 படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடப்பதால், அங்கு விடாமுயற்சி படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என முடிவாகியுள்ளது.

- Advertisement -

சில தினங்களுக்கு முன், பிரசாத் ஸ்டுடியோவில் ரஜினி 170 படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், அங்கு நடந்து வந்த விஜய் 68 படப்பிடிப்புக்கு, உடனடியாக கோகுலம் ஸ்டுடியோவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ரயில்வே கம்பார்ட்மென்ட் செட் கோகுலம் ஸ்டுடியோவுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு சண்டை காட்சி நடத்தப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய் ஷூட்டிங் அருகருகே நடந்தால், அவர்கள் இருவரும் சந்தித்து பேசலாம். அதே போல் விஜய், அஜீத் பட ஷூட்டிங் நடந்தால் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தால் அந்த புகைப்படங்கள் வைரலாகும். இப்படி எதிரும் புதிருமாக கருதப்படும் நடிகர்கள் சந்திப்பது, பேசுவது, நட்பு பாராட்டுவது ரசிகர்களிடையே நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதை நேற்று தங்கள் நீண்ட கால நட்பின் அடையாளமாக ரஜினி, கமல் சந்தித்து வெளிப்படுத்தினர். அதை அஜீத், விஜய் புரிந்துக்கொண்டால் ரசிகர்களுக்கு நல்லது.

- Advertisement -

சற்று முன்