நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழ் சினிமாவில் நெம்பர் 1 இடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் அந்த இடத்தில் இருப்பது நடிகர் ரஜினிகாந்த் தான் என்றால் அது மிகையல்ல. 74 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகர் அவர்தான். அவருடன் நடிக்க வந்த மற்ற நடிகர்கள் எல்லாம் எப்போதோ காணாமல் போய்விட்டார்கள்.
இப்போது கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. தெலுங்கு கன்னடம் இந்தி படங்கள் தொடர்ந்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி வருகின்றன. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் கூட 1800 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தியில் ஜவான் படம் 1150 கோடி ரூபாயை அள்ளியது. அதனால் தமிழில் அந்த சாதனையை கூலி படம் நிகழ்த்துமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
அபூர்வ ராகங்கள் படம் மூலம் கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தது அவரது குருநாதர் கே பாலச்சந்தர்தான். இப்போது தனது 50வது ஆண்டை சினிமாவில் ரஜினி நிறைவு செய்திருக்கிறார். எப்போதுமே ரஜினி, தன் குருநாதர் கே பாலசந்தர் குறித்து பேசி தன் நன்றி உணர்வை வெளிப்படுத்துவார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, இதை எத்தனையோ முறை சொல்லி இருக்கேன். இன்னும் 1000 முறை சொன்னாலும் சலிக்காது. என்னை பார்த்து ஆக்ட் பண்ணுன்னு சொல்லிட்டு, நான் நடித்ததை பார்த்த பிறகு, என்னை கொஞ்சம் உட்காரு சொல்லி, கே பாலசந்தர் சார் சொன்ன ஒரே வார்த்தை நீ தமிழ் மட்டும் கத்துக்கோ, உன்னை எங்கே கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பாரு என்று சொன்னார்.
நீ தமிழ் மட்டும் கத்துக்கோ, நான் உன்னை எங்கே கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பாரு என்றார். இதில் நான் என்று அவர் சொன்னது பாலசந்தர் இல்லே. தமிழ் மக்களை. ஏன்னா தமிழ் மக்களோட ரசனை, தமிழ் மக்கள் எதை விரும்பறாங்க என்பதை என்னோட ஆக்சன் நடிப்புல அவர் தெரிஞ்சுக்கிட்டார். அந்த மாதிரி ஒரு பெரிய மகான் அவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது குருநாதர் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





