நடிகர் அர்ஜூன் தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர். கடந்த 1984ம் ஆண்டில், இயக்குனர் ராமநாராயணன் இயக்கிய நன்றி என்ற படத்தில், நடிகர் அர்ஜூன் ஹீரோவாக அறிமுகமானார். இதுவரை 40 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களால் ஒருவராக இப்போதும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நடிகராக 61 வயதிலும் அசத்திக்கொண்டு இருக்கிறார். கடந்த 1980, 90களில் நடிகர் அர்ஜூன் நடித்த படங்களில் அசத்தலான சண்டை காட்சிகள் இருக்கும். இதற்கான முறையான சண்டை பயிற்சிகளை கற்று திரையில் அசத்தியவர் அர்ஜூன்.
அதனால்தான் அவர் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுகிறார். சங்கர் குரு, படிச்சபுள்ள, கல்யாண கலாட்டா, தாயம் ஒண்ணு போன்ற படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்திய அர்ஜூனுக்கு ஷங்கர் இயக்கிய ஜெண்டில் மேன் படம் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுத்தது. அடுத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் படம், இப்போதும் அர்ஜூன் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது.
சமீபத்தில், நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் வெகு சிறப்பாக, கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த திருமண விழாவில் திரை நட்சத்திரங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், தென்னாப்பிரிக்காவில் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போது பல போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். அதில் உமாபதியும் ஒருவர். என்னமோ தெரியவில்லை. அங்கு இருந்தவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது உமாபதியை தான். ஆனால் அப்போது என் மகளும், உமாபதியும் லவ் பண்றாங்க என்பது எனக்கு தெரியாது.
எனக்கு உமாபதியை பிடிக்க காரணம் அவரோட எளிமை, இன்னோசன்ட், நேர்மை, எனர்ஜி, சென்ஸ் ஆப் கியூமர். அவர் ரொம்ப திறமையானவர். ஆக்ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. கூடிய சீக்கிரம், நீங்கள் எல்லாம் அதை பார்க்க போகிறீர்கள். டான்ஸ் உள்ளிட்ட எல்லா திறமையும் கொண்டவர் என்று தனது மருமகன் குறித்து பெருமையாக பேசியுள்ள அர்ஜூன், தனது இயக்கத்தில் மருமகனை ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என்பதை இதில் மறைமுகமாக கூறியிருக்கிறார்.





