- Advertisement -
Homeபொழுதுபோக்குபாசத்துடன் ஏ.கே.விற்கு பூ கொடுத்த ரசிகர்... அஜித்தின் அடுத்த ரியாக்ஷன் என்ன...

பாசத்துடன் ஏ.கே.விற்கு பூ கொடுத்த ரசிகர்… அஜித்தின் அடுத்த ரியாக்ஷன் என்ன…

- Advertisement -

தமிழ் சினிமாவில் அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அஜித். அந்த சமயத்தில் வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த நடிகருக்கு, ஆசை திரைப்படம் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு, முழுமையான ஸ்கோப் வழங்கப்பட்டிருந்தாலும் அஜித்தும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

இதன் பிறகு வெளியான காதல் கோட்டை, காதல் மன்னன் திரைப்படங்கள் அஜித்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. பிறகு படிப்படியாக உயர்ந்த அஜித், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உண்டாக்கி பெரும் நடிகரானார். இன்றளவும் அஜித்தை, ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

அமர்க்களம் படத்திற்கு பிறகு, பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார் அஜித் குமார். அவரை பொது விழாக்களில் பார்ப்பது என்பது மிக அரிதாகவே காணப்படுவதாக அப்போதே பலரும் கூறி வந்தனர். இதை இன்று வரை அவர் கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தலை காட்டாத அஜித், ஒவ்வொரு திரைப்படத்தை முடித்த பிறகும் தனது குடும்பத்துடன் ஒரு குறிப்பிட்ட காலம் செலவழித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த பைக் ரேஸிலும் ஆர்வம் காட்டி வரும் அவர், கடந்த ஆண்டு இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வெளிநாட்டு டூரிலேயே இருந்தார். ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பைக் டூர் சென்றதாக அறிவிக்கப்பட்டது.

அஜித்தை எப்போது தான் அரிதாக பார்க்க முடியும் என்பதால், அவர் வெளியே வரும்போது எடுக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகும். சில நாட்களுக்கு முன்பு தேர்தலில் வாக்களிக்க அவர் சென்றபோது ரசிகர்கள் கூடினர். அப்போது ஒருவர் அஜித் அருகே அருகே சென்று செல்பி வீடியோ எடுத்தார். இதனால் கோபம் அடைந்த அஜித் அவரிடம் செல்போனை பிடுங்கி, பிறகு கொடுத்தார்.

இதேபோல் சமீபத்தில் துபாய் சென்ற போதும் அஜித், ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி அவர் எடுத்த போட்டோவை அளித்தார். இப்படியான தற்போது ரசிகர் ஒருவருடன் அஜித் கனிவாக நடந்து கொண்ட காட்சிகள் வெளியாகி உள்ளன. அதாவது ரசிகர் ஒருவர் அஜித்திற்கு ரோஜா பூவை கொடுக்க, அதனை அஜித் அன்புடன் வாங்கிக் கொண்டார். பிறகு ரசிகருடன் அவர் போட்டோ எடுக்கும் காட்சியும் வெளியாகி உள்ளது. இதனை இணையத்தில் அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

சற்று முன்