கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் 96 இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி திரிஷா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். ராம் ஜானகி ஆகிய கேரக்டர்களில் இருவரும் வாழ்ந்திருந்தனர் என்றே சொல்லலாம். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
அடுத்து 96 படத்தின் 2ம் பாகம் எப்போது உருவாகும் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இயக்குனர் பிரேம்குமார் 96 படத்தின் 2ம் பாகத்தின் முழு ஸ்கிரிப்டையும் ரெடி செய்தார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க சம்மதித்தார். 96 படத்தின் 2ம் பாகம் கதையை கேட்ட அவர், மிகவும் உற்சாகமாகி இயக்குனருக்கு 5 பவுன் தங்க சங்கிலியை பரிசளித்தார்.
அந்த அளவுக்கு 96 படத்தின் 2ம் பாகம் கதை தயாரிப்பாளரை கவர்ந்தது. இதை தொடர்ந்து 96 படத்தின் 2ம் பாகம் கதையை நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து இயக்குனர் பிரேம்குமார் கூறியிருக்கிறார். முதல் பாகத்தில் சிங்கப்பூரில் இருந்துதான் திரிஷா வருவது போல் இயக்குனர் காட்டியிருந்தார். அதனால் 2ம் பாகத்தில் சிங்கப்பூருக்கு திரிஷாவை விஜய் சேதுபதி தேடி செல்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் கதையை கேட்ட நடிகர் விஜய் சேதுபதி அதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை. கதை குறித்தும் அவர் திருப்தியை வெளிப்படுத்தவில்லை. 96 படத்தின் 2ம் பாகத்தில் தனக்கு நடிக்க ஆர்வமோ விருப்பமோ இல்லை என்று அவர் நாசூக்காக கூறிவிட்டு நகர்ந்து விட்டார். அவர் இந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆனதால் அடுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் அந்த கதையை இயக்குனர் கூறியிருக்கிறார்.
கதை ரொம்ப சூப்பராக இருக்கு, ஆனால் இந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக வராது என பிரதீப் ரங்கநாதனும் ஒதுங்கி விட வேறு வழியின்றி 96 படம் 2ம் பாகத்தை இயக்குனர் பிரேம்குமார் கிடப்பில் போட்டுவிட்டார். எனினும் அவரை அழைத்துப் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வேறு ஒரு கதை ரெடி பண்ணுங்க, வேறு ஹீரோவை வெச்சு படம் பண்ணலாம் என்று அதிரடியாக கூறிவிட்டார்.
இதையடுத்து இயக்குனர் பிரேம்குமார், நடிகர் சியான் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். கதையின் சில வரிகளை மட்டுமே கேட்ட நடிகர் விக்ரம், ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாக கூறிவிட்டார். இதையடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் ஒரு புதிய படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.





