- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜீத்குமார், பதட்டமடைந்த ஏகே ரசிகர்கள் - என்ன ஆச்சுன்னு...

அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜீத்குமார், பதட்டமடைந்த ஏகே ரசிகர்கள் – என்ன ஆச்சுன்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த 4 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வந்த விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், தாமதம் நீடித்தது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விடாமுயற்சி படத்தில் நடிகை திரிஷா ஜோடியாக நடித்து வருகிறார். திரிஷாவும், அஜீத்குமாரும் நடிக்க வேண்டிய காட்சிகள் நிறைய படமாக்கப்பட வேண்டிய நிலையில், திரிஷா கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஏனெனில் திரிஷா ஏற்கனவே கொடுத்த தேதிகளில், மணல்புயல், கடும் மழை காரணமாக ஷூட்டிங் அஜர்பைஜானில் நடக்கவில்லை.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. மலையாளத்தில் இரண்டு படங்களில், தெலுங்கில் 3 படங்களில், தமிழில் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்திலும் இப்போது நடித்து வருகிறார். அதனால் திரிஷா கால்ஷீட் இல்லாததால் தாமதமாவதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் நடந்திருப்பது வேறு. ரஜினி நடிக்கும் வேட்டையன், அஜீத் நடிக்கும் விடாமுயற்சி என 2 படங்களையும் தயாரிப்பது லைகா புரடக்சன் நிறுவனம்தான். சமீபத்தில் லால் சலாம் படத்தையும் அந்நிறுவனம் தயாரித்தது. தொடர்ந்து பெரிய படங்களை தயாரிப்பதால் பைனான்ஷியல் பிராப்ளம் காரணமாக, விடாமுயற்சி படத்தை தற்காலிகமாக டிராப் செய்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மைதான் என்றும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை, நடிகர் அஜீத்குமார் குடும்பத்தினருடன் கொண்டாடிய நிலையில் சென்னையில் தான் இருந்து வருகிறார்.

இன்று அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் என்றும், அவர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பைக் விபத்தில் அடிபட்டு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தவர். அதனால் இதுபோன்ற மருத்துவ பரிசோதனை செய்வது சகஜம்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும் அஜீத்குமார் உடல்நலத்தில் எந்த பிரச்னையும் வந்துவிடக்கூடாது என ரசிகர்கள் கருதுவதால் அச்சமடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்