- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமர்சனங்களை பொருட்படுத்தாமல் நடிகர் ராகவா ,லாரன்ஸ் செய்த அந்த விஷயம் - எப்படியோ, நல்லபடியா ரிசல்ட்...

விமர்சனங்களை பொருட்படுத்தாமல் நடிகர் ராகவா ,லாரன்ஸ் செய்த அந்த விஷயம் – எப்படியோ, நல்லபடியா ரிசல்ட் வந்தால் சரிதான்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக துவக்கத்தில் இருந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஹீரோக்களுக்கு பாடல் காட்சியில் நடனம் கற்றுக்கொடுத்து, கேமரா முன்பு ஆட வைத்தவர். ஒரு கட்டத்தில் இயக்குநர் சரண், தனது அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடலுக்கு ராகவா லாரன்சையே ஆட வைத்தார்.

முதல் பாடல் காட்சியிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார் ராகவா மாஸ்டர். அடுத்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில், வில்லத்தனம் கலந்த ஒரு கேரக்டரில் நடித்தும் அசத்தினார். தொடர்ந்து முனி, பாண்டி, காஞ்சனா படங்களில் நடித்து முன்னணி நடிகராக சினிமாவில் அடையாளம் பெற்றார்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிகராக மக்கள் மத்தியில் பெற்ற அறிமுகத்தை விட மாற்றுத்திறனாளிகள், ஏழைக்குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்தி அவர்களுக்கு மாதந்தோறும் பல லட்சங்களை செலவு செய்வதும், கனமழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றக் காலகட்டத்தில் கோடிக்கணக்கில் உதவுவதும் அவரது தியாக குணத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்களின் மனதில் அதிக இடம்பிடித்தார்.

அவர் அதிக எதிர்பார்ப்புடன் நடித்த சந்திரமுகி 2 படம் சரியாக போகவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த நிலையில் இருந்த போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அவரது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது தானே டைரக்ட் செய்து ஹீரோவாக நடிக்க, பாண்டிச்சேரியில் ரூம் போட்டு கதை டிஸ்கசன் செய்து வருகிறார் ராகவா மாஸ்டர்.

- Advertisement -

கடந்த மாதம் 28ம் தேதி, தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு, தமிழக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு விஜய பிரபாகரன், ஷண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் உள்ள நிலையில், ஷண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

கேப்டன் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு திரும்பிய நடிகர் ராகவா லாரன்ஸ், தம்பி ஷண்முக பாண்டியன் விரும்பினால் அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோல் செய்து தருகிறேன் என்று கூறியிருந்தார். அதே போல், இப்போது அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 3 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். லாரன்ஸ் நடித்த படமே ஓடாத போது, ஷண்முகபாண்டியன் படத்தில் இவர் நடித்து உதவப் போகிறாரா என பலரும் விமர்சித்த நிலையில், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் வருகிறார் ராகவா லாரன்ஸ்.

- Advertisement -

சற்று முன்