- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களத்துக்கு செல்லும் நடிகர் விஜய், இந்த ஒரு விஷயத்தில் விஜயை சினிமாவில் பின்பற்றுவாரா நடிகர்...

அரசியல் களத்துக்கு செல்லும் நடிகர் விஜய், இந்த ஒரு விஷயத்தில் விஜயை சினிமாவில் பின்பற்றுவாரா நடிகர் அஜீத்குமார்? – அவரே அப்படி சொல்லாமல் மாறிடுவாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அதுவும் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்தை, பாட்ஷா படம் வெளியான 1994ம் ஆண்டில் இருந்தே, அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர். தமிழக மக்கள் தரப்பிலும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கடைசி வரை, ஆண்டவன் சொன்னா வருவேன், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்றெல்லாம் டயலாக் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடைசி வரை அரசியலுக்கு வரவே இல்லை. ஆனால் அவருக்கு பிறகு 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்த நடிகர் விஜய், மிக துணிச்சலாக அரசியல் கட்சியை துவங்கி விட்டார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறார்.

- Advertisement -

விஜய்க்கு இருக்கும் துணிச்சலும், தைரியமும், அரசியல்வாதிகளை எதிர்க்கிற வீரமான குணமும் ரஜினிகாந்திடம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் தோல்வியே தொடர்ந்து கிடைத்தாலும் அரசியல் களத்தில் இறங்கி நின்றுக்கொண்டு இருக்கிறார் கமல்ஹாசன் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பே, தனது படங்களில் அநியாயத்தை தட்டிக் கேட்பது மட்டுமின்றி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கவும் தயங்கவில்லை. குறிப்பாக கத்தி படத்தில் விவசாயிகளின் அவலம் குறித்து விஜய் பேசினார். சர்கார் படத்தில் அரசியல்வாதிகளின் அவலத்தை சுட்டிக் காட்டினார்.

- Advertisement -

இப்படி விஜய் அரசியல்வாதிகள், போலீஸ், அரசு அதிகாரிகள் குறித்து சுட்டிக்காட்டும் படங்களில் நடித்துள்ள நிலையில், அஜீத்குமார் இதுவரை நடித்தது வெறும் மசாலா படங்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது படத்தில் சமூக பிரச்னைகள் சார்ந்த எந்த விஷயத்தையும் அவர் கொண்டு வந்ததும் இல்லை. அதுபோன்ற கதைகளில் நடித்ததும் இல்லை என்று கூறப்படுகிறது.

இப்போது விஜய் அரசியல் களத்துக்கு செல்ல தயாராகி விட்டார். அதனால் இனிமேலாவது, மக்களுக்கு பயன்படும் விதமான நல்ல சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க அஜீத்குமார் நடிக்க முன்வர வேண்டும். வெறும் ஹீரோயிசம் மட்டும் நாயகனாக அவர் தொடர்வது சரியல்ல என்ற பேச்சு எழுந்துள்ளது. அதே நேரத்தில் விஜய் அரசியல்வாதி ஆனால் ஒரு வேளை அப்போது அரசியல் குறித்த எதிர் கருத்து சொல்லும் கதைகளில் அஜீத்குமார் தானாகவே நடிக்க கூடும் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்