- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகைகள் கங்கனா ரெனாவத் டாப்ஸி இடையே தொடரும் பனிப்போர் - என்னப்பா குழாயடி...

பாலிவுட் நடிகைகள் கங்கனா ரெனாவத் டாப்ஸி இடையே தொடரும் பனிப்போர் – என்னப்பா குழாயடி சண்டையை விட மோசமா இருக்குதே? அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் கங்கனா ரெனாவத் மற்றும் டாப்சி பன்னு. பாஜக எம்பியாக உள்ள நடிகை கங்கனா ரெனாவத் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தாம் தூம் தலைவி சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

அதேபோல் நடிகை டாப்ஸி பன்னும் காஞ்சனா 2 ஆடுகளம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நடிகை கங்கனா ரெனாவத்துக்கும் நடிகை டாப்ஸிக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது. அவ்வப்போது ஒருவரை ஒருவர் நேரடியாகவும் சில நேரங்களில் மறைமுகமாகவும் தாக்கி பேசிக் கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது.

- Advertisement -

ஆனால் கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சலசலப்பு அடங்கி இருந்தது. இந்த நிலையில் இப்போது ஒரு நேர்காணலில் பங்கேற்ற டாப்ஸியிடம் கங்கனா ரெனாவத்துடன் நீடிக்கும் மோதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதுகுறித்து பேசிய நடிகை டாப்ஸி, கங்கனாவுக்கும் எனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அதை வெளிப்படுத்தும் முறைகள் எங்களது வளர்ப்பு மற்றும் சூழ்நிலைகளை பிரதிபலிக்கின்றன.

நாங்கள் எப்போதுமே நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை என்று டாப்ஸி அந்த நேர்காணலில் கூறியிருந்தார். நடிகை டாப்ஸியின் இந்த வார்த்தைகள் நடிகை கங்கனா ரெனாவத்தை கோபப்படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலமாக அவர் தனது பதிலடியை தந்திருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில், வரவிருக்கும் தனது பி கிரேடு திரைப்படத்தை விளம்பரப்படுத்த டாப்ஸி என்னை பயன்படுத்திக் கொள்கிறார். என் வளர்ப்பு முறை குறித்தும் பெற்றோர் குறித்தும் பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏன் ஒரு மலிவான நகல் இப்படி எல்லை மீறுகிறது? என்று டாப்ஸியின் பெயரை குறிப்பிடாமல் காட்டமாக கங்கனா ரெனாவத் அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இருப்பினும் தான் பதிவிட்ட சில பதிவுகளை சிறிது நேரத்துக்கு பிறகு தனது சோசியல் மீடியம் மீடியா பக்கத்திலிருந்து கங்கனா ரெனாவத் நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உள்ள சீனியர் நடிகைகள் பலரும் தங்களுக்குள் ஆழமான நட்பில் ஒருவரை ஒருவர் பாராட்டி பெருமையாக பேசி வருகின்றனர். ஆனால் பாலிவுட்டில் இது நேர்மாறாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்