- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தப் படத்தில் நடித்த போது நடிகர் அஜித்குமார் என்னை ஏமாற்றி விட்டார்; பிரபல நடிகை பகிரங்க...

அந்தப் படத்தில் நடித்த போது நடிகர் அஜித்குமார் என்னை ஏமாற்றி விட்டார்; பிரபல நடிகை பகிரங்க குற்றச்சாட்டு

- Advertisement -

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அமராவதி படம் அறிமுகமான அவர் இன்று, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக டாப் லெவலில் இருந்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமேஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்க இருக்கிறது.

நடிகர் அஜித் குமார், பயண பிரியர். அடிக்கடி பைக்கில் டூர் அடிப்பது அவரது வழக்கம். அதே போல் அவர் பிரியாணி பிரியர். அதனால் அடிக்கடி சமைப்பதில் ஆர்வம் காட்டுவதார். படப்பிடிப்பு இல்லை என்றால் வீட்டில் அன்று பிரியாணி சமைக்க துவங்கி விடுவார். அதே போல் படப்பிடிப்பு தளங்களிலும் அடிக்கடி சிக்கன் பிரியாணி செய்து அனைவருக்கும் பரிமாறுவது அவரது வழக்கம்.

- Advertisement -

சமீபத்தில் கூட அஜர்பைஜானில் நடந்த விடாமுயற்சி பட சூட்டிங்கில் பிரேக்கில், தன்னுடன் நடித்த நடிகர்கள் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினருக்கு அஜித்குமார் பிரியாணி, சிக்கன் கிரேவி செய்து அனைவருக்கும் பரிமாறி இருந்தார்.

அதேபோல், அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பி பிறகு, அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி அறுவை சிகிச்சை செய்த கொண்டார். அதன் பின் நண்பர்களுடன் பைக்கில் டூர் சென்ற நடிகர் அஜித்குமார், அவருடன் பயணித்த நடிகர் ஆரவ் மற்றும் சக நண்பர்களுக்கு ஒரு இடத்தில், பெரிய பாத்திரங்களை வைத்து பிரியாணி சமைத்து பரிமாறினார். அது வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன், இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ரஜினியின் ரீமேக் பில்லா படத்தில் அஜீத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை நமீதாவும் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் நமீதா கூறுகையில், நடிகர் அஜித்குமார் சிக்கன் பிரியாணி சமைப்பதில் வல்லவர். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் அவரது கையாலேயே பிரியாணி செய்து பரிமாறுவார் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அடிக்கடி இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

ஆனால் பில்லா படத்தில், நான் நடித்த போது, எனக்கு அவர் பிரியாணி சமைத்து பரிமாறவே இல்லை. அந்த விஷயத்தில் அவர் என்னை மிகவும் ஏமாற்றி விட்டார். ஆனால் நான் ஷெட்டில் இல்லாத போது, எனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஒருவேளை அவர் பிரியாணி சமைத்து இருக்கலாம். அது எனக்கு தெரியவில்லை. அதே போல் பில்லா படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் அஜித்குமாரை நேரில் பார்த்தது இல்லை. பில்லா படத்தில் நடித்த பின்பும் நான் அஜித்குமாரை ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை. பில்லா படத்தில் நடிக்கும் போது மட்டுமே, அஜித்குமாரை நேரில் சந்தித்தேன் என்று நமீதா இப்போது கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்