- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவு பகல் என மாறி மாறி கால்ஷீட் ஒதுக்கி நடித்துவரும் நடிகர் அஜீத்குமார், ஐதராபாத்தில் நடந்து...

இரவு பகல் என மாறி மாறி கால்ஷீட் ஒதுக்கி நடித்துவரும் நடிகர் அஜீத்குமார், ஐதராபாத்தில் நடந்து வரும் தரமான சம்பவம் – காமெடி நடிகர் மாதிரி இப்படி ஒரு பிஸியா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. இந்த படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரியில் அந்த படம் ரிலீஸ் ஆனது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் பேராதரவால் கணிசமான வசூலை அள்ளியது.

தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படப்பிடிப்பு, 9 மாதங்களுக்கு பிறகு அஜர்பைஜானில் துவங்கியது. அஜீத்குமார் தந்தை சுப்ரமணி மறைவால், படப்பிடிப்பு மீண்டும் துவங்க முடியாத நிலை ஏற்பட்டதால், 9 மாதங்கள் காலதாமதம் ஏற்பட்டது. அஜர்பைஜானில் துவங்கிய படப்பிடிப்பு பல காரணங்களால் தொடர்ந்து தடைபட்டது.

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பே நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கி நடத்தப்பட்டது. அஜர்பைஜானில் இறுதிக்கட்ட காட்சிகளும், தடைபட்ட காட்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக, ஐதராபாத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜீத்குமார் ஒரு ஷெட்யூல் நடித்து முடித்துள்ள குட்பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர்கள் நட்டி, சுனில் நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. அதே போல், விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜீத்குமார் – திரிஷா பங்கேற்ற காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

- Advertisement -

இப்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல்படி அஜீத்குமார் காலை முதல் பிற்பகல் 3 மணி வரை விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். அதன்பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குட்பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். அஜீத்குமார் ஹேர்ஸ்டைல், தாடி, மீசை போன்றவற்றில் பெரிய கெட்டப் சேஞ்ச் இல்லாததால், இரண்டு படங்களிலும் உடைகளை மட்டுமே மாற்றிக்கொண்டு நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தை எப்படியும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும். அதே நேரத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பையும் அதிக கால அவகாசம் என்று தாமதிக்க கூடாது என்பதால் ஒரே நாளில் பகல், இரவு என மாறி மாறி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு அஜீத்குமார் நடித்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்