அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது. வரும் வியாழன் கிழமை விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கிட்டத்தட்ட அஜித் குமார் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் திரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தி பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. காணாமல் போன தனது மனைவியை ஹீரோ கண்டுபிடிக்கும் கதை தான் இது. இதன் டீசரும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.
படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் விடாமுயற்சி மற்றும் சவதிகா ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆகின. இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த மகிழ் திருமேனி, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குக்கு வாருங்கள் என்று கூறியிருந்தார்.
படத்தில் ஹீரோவுக்கு என்று மாஸ் காட்சிகள் இருக்காது, பெரியதாக இன்டர்வெல் காட்சிகள் இருக்காது இருப்பினும் அதில் உள்ளார்ந்த கதை இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். இதன் ட்ரெய்லரை பார்த்த பலரும் ஹாலிவுட் தரத்தில் அதன் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி இருந்தார்கள். லைக்கா நிறுவனம் இதனை தயாரித்து இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடா முயற்சி திரைப்படத்திற்காக அஜித்குமார் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒரு திரைப்படத்திற்காக மட்டும் அவர் கிட்டத்தட்ட 105 கோடி ரூபாய் சம்பளம் வைத்திருக்கிறாராம். அஜித்தின் திரையுலக கேரியரிலேயே இதுதான் அதிகபட்ச சம்பளம் என்று கூறப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் அஜித், இதனை விட அதிக சம்பளம் பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





