நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி பாடல் காட்சி படப்பிடிப்பில், தாய்லாந்து நாட்டில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த பாடல் காட்சியை முடித்து விட்டு, துபாயில் துவங்கும் கார் பந்தய போட்டியில் பங்கேற்க செல்கிறார். தொடர்ந்து 10 மாதங்கள், 10 நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் தனது அணி வீரர்களுடன் அஜீத்குமார் கலந்துக்கொள்ள உள்ளார்.
மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் துபாய் செல்லும் அஜீத்குமார் அங்குதான் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட உள்ளார். மேலும் தைப் பொங்கல் பண்டிகையை கூட துபாயில்தான் அவர் கொண்டாட அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி தமிழ்நாட்டில் ஏகே ரசிகர்கள் பொங்கலை கொண்டாட விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது.
மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் சிறப்பான பணி, படத்தின் தரம் ஆகியவற்றை ரசித்த அஜீத்குமார், மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று ஆதிக் ரவிச்சந்திரனிடம் உறுதியாக கூறியிருக்கிறார்.
குட்பேட் அக்லி படம் துவங்குவதற்கு முன்பு, மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்ற போது, மார்க் ஆண்டனி 2ம் பாகம் எடுக்க ஆதிக் ரவிச்சந்திரனும் விஷாலும் திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கியுள்ளனர். அப்போதுதான் அஜீத்குமாரின் குட்பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வந்தது. இதுகுறித்து அவர் தயங்கி தயங்கி விஷாலிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
அதற்கு விஷால், அஜீத்குமார் சார் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். முதலில் அவரது படத்தை இயக்கி முடித்துவிட்டு வா, பிறகு மார்க் ஆண்டனி 2 படம் பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கூறி, சந்தோஷமாக ஆதிக் ரவிச்சந்திரனை அஜீத்குமாரிடம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவரத்தை அப்போதே அஜீத்குமாரிடம் ஆதிக் ரவிச்சந்திரனும் கூறியிருக்கிறார்.
இப்போது வரை அதை மறக்காமல் உள்ள நடிகர் அஜீத்குமார், இப்போது விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி 2 படத்தை முடித்துவிட்டு வந்து விடுங்கள். மீண்டும் நாம் இணைந்து இன்னொரு படம் செய்வோம் என்று ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறியிருக்கிறார். அதனால் கார் ரேஸிங் முடிந்த பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில்தான் அஜீத்குமார் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





