- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமாரின் சினிமா வாழ்க்கை? - இப்படி ஒரு பிளானில் இருக்கிறாரா...

அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமாரின் சினிமா வாழ்க்கை? – இப்படி ஒரு பிளானில் இருக்கிறாரா அஜீத் – உண்மையில் ரசிகர்களுக்கு இதுதான் பெரிய டிவிஸ்ட்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு பிறகு அவர் இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதற்கு முக்கியமான காரணம், அஜீத்குமார் மாஸ் ஹீரோ. வெற்றிமாறன் கதையை நம்பி மட்டுமே படம் எடுப்பவர். கதைக்காக ஹீரோ நடிக்க வேண்டுமே தவிர, ஹீரோவுக்காக கதையை சிறிதும் பாதிக்க விடமாட்டார். கதையின்படி தான் ஹீரோ இருக்க வேண்டும். அதற்கேற்ப மட்டுமே நடிக்க வேண்டும். வெற்றிமாறன் படங்களில் கதை தான் ஹீரோ. இதை ஹீரோ ஏற்றுக்கொண்டு நடிக்க வேண்டும் என்பதுதான் விதி.

- Advertisement -

இந்த சூழலில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் அஜீத்குமார் இருப்பார். அதன்பிறகு அவர் வெளிநாட்டில் செட்டிலாகி விடும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. அவருக்கு சினிமா வாழ்க்கை போரடித்து விட்டதால் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை அவர் வாழ விரும்புகிறார் என்றும் பரபரப்பான ஒரு பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் சுபேர் சமீபத்திய ஒரு நேர்காணலில் கூறியதாவது, அஜீத்குமார் ஒரு தனிமை விரும்பி. சுதந்திரமாக வாழ விரும்புபவர். அவருக்கு சினிமா மட்டுமின்றி பயணங்களில், சவால்களில் அதிக ஆர்வம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவரால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. அதனால்தான் வருடத்தில் பாதி நாட்கள் வெளிநாட்டில் கழிக்கிறார். ஆறு மாதங்கள் மட்டுமே தமிழ் நாட்டில் இருக்கிறார்.

- Advertisement -

அஜீத்குமாருக்கு சினிமா படப்பிடிப்பு, சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் என நடித்து நடித்து சலித்துவிட்டது, தேவைக்கு மீறிய அளவில் மக்கள் மத்தியில் அவர் புகழை பார்த்துவிட்டார். தேவைக்கு மீறிய பணத்தையும் அவர் பார்த்துவிட்டார். அதனால் பணம், புகழ் தாண்டிய ஒரு நிறைவான. தனிமையான, சுதந்திரமான வாழ்க்கையை அவர் வாழ மிகவும் ஆசைப்படுகிறார். அதனால்தான் சிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். தல, அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டங்களையும் மறுத்துவிட்டார்.

அதனால் இன்னும் 5 ஆண்டுகள் அவர் தமிழ் சினிமாவில் இருப்பார். நடிப்பார். அதன்பிறகு அவர் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி விடுவார். இப்போதே அவருக்கு துபாயில் சொந்த வீடு உள்ளது. அங்கு அலுவலகம் திறந்துள்ளார். டிராவல், டிரக்கிங், சுற்றுலா சார்ந்த விஷயங்களை சார்ந்த பிஸ்னஸ்சில் அவர் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதனால் சினிமா மீது அதிக கவனமும், ஈர்ப்பும் குறைந்து வருவதால்தான் அவர் படங்களில் நடிப்பதை சில ஆண்டுகளாகவே குறைத்துக்கொண்டார். இதுதான் எதிர்காலம் குறித்த அவரது பிளான் ஆக உள்ளது என, அதில் சுபேர் உறுதியாக கூறியிருக்கிறார். இது அஜீத் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்