- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க முண்டியடிக்கும் ஓடிடி தளங்கள், எத்தனை கோடிகள் தெரியுமா? இதில்...

கூலி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க முண்டியடிக்கும் ஓடிடி தளங்கள், எத்தனை கோடிகள் தெரியுமா? இதில் சன் பிக்சர்ஸ் போட்ட கிடுக்கிப்பிடி – 73 வயதிலும் இப்படி மாஸ் காட்டுகிறாரே ரஜினி?

- Advertisement -

லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இப்போது டைரக்ட் செய்து வருகிறார். இதுவரை படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கடைசி ஷெட்யூல், வைசாக்கில் நடந்து முடிந்துள்ளது. ஆயுதபூஜை விழாவுக்காக 10 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற 15ம் தேதி கூலி ஷூட்டிங் துவங்க உள்ளது.

மாநகரம் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை பெற்றவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்கள் என 5 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. மாஸ்டர், லியோ படங்கள் விமர்சன ரீதியாக சற்று ஏமாற்றம் தந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படங்கள்தான்.

- Advertisement -

அதிலும் கார்த்தி நடித்த கைதி, கமல் நடித்த விக்ரம் ஆகிய 2 படங்களுமே தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய அளவில் கவனம் பெற்ற படங்களாக இருந்தன. இதில் கைதி படம் கதாநாயகி இல்லாமல், பாடல் காட்சி இல்லாமல் 57 இரவுகளில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் அரை நாள் மட்டுமே பகல் காட்சி ஷூட்டிங்கை லோகேஷ் கனகராஜ் நடத்தியுள்ளார்.

இப்போது மாஸ் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, மஞ்சும்மெல் பாய்ஸ் நடிகர் சவுபின் சாஹர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால் கூலி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்குவதில் அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் சென்னையில், சில தினங்களாக தங்கி, கூலி படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க விலை பேசி வருகின்றனர்.

இதுவரை ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு விலை சொன்னதில் கூலி படத்துக்கு ரூ. 175 கோடி வரை டிஜிட்டஸ் ரைட்ஸ் விலை பேசியுள்ளனர். மேலும், நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்துக்கும் ரூ. 175 கோடி விலையாக தந்து, 2 படங்களுக்கும் சேர்ந்து ரூ. 350 கோடி தருவதாக விலை பேசியுள்ளனர். இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 400 கோடி என விலையை உயர்த்தியுள்ளது. 2 படங்களுக்கும் ரூ. 400 கோடி தரும் ஓடிடி நிறுவனத்துக்கு படங்களை தருவதாக சன் பிக்சர்ஸ் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. 73 வயதில் ரஜினி நடிக்கும் படத்துக்கு இப்படி நூற்றுக்கணக்கில் கோடிகளை கொட்டித் தருகிறார்களே என, ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்