வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் லியோ. வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தியோக் பகுதியில் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் அமைதியாக பார்த்திபன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் விஜய். அவரைச் சுற்றி அடுத்தடுத்து பிரச்சினைகள் நடக்க, அதன் மூலம் அவரது புகைப்படம் மீடியாவில் பரவுகிறது. இதைப் பார்த்துக் கொண்டு வில்லன்கள் கும்பல் அவர்தான் லியோ எனக் கூறி தியோக் பகுதிக்கு செல்ல, அதற்குப் பிறகு நடக்கும் சுவாரசியங்களே லியோ படத்தின் திரைக்கதையாக அமைந்துள்ளது.
படம் ஆரம்பித்ததன் முதல் முடியும் வரை அத்தனை வேலைகளையும் தனது தோளில் சுமந்து பட்டையை கிளப்பி இருக்கிறார் விஜய். குறிப்பாக முதல் பாதியில் காபி ஷாப் சண்டை, கழுதைப்புலி காட்சி, மார்க்கெட் சண்டை, பேடாஸ் பாடல் என அத்தனையும் கச்சிதமாக அமைந்ததால் ரசிகர்கள் கொண்டாடினர்.
இரண்டாம் பாதி நன்றாக இருந்தாலும் அதில் மூடநம்பிக்கை நரபலி உள்ளிட்ட விஷயங்கள் அந்த அளவு சுவாரசியமாக இல்லை என்றும், இதன் காரணமாக அந்த காட்சிகள் சற்று சுமாராகத்தான் உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
கடந்த வியாழக்கிழமை படம் ரிலீசான நிலையில், முதல் நாளில் மட்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் 148 கோடியே 50 லட்சம் ரூபாயை தாண்டி படம் வசூலித்தது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் இரண்டாம் நாள் இதன் வசூல் பாதி ஆனதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் விமர்சனமே இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் லியோ வசூலில் பட்டையை கிளப்பியது.
தற்போது வரை 500 கோடி ரூபாய் அளவுக்கு லியோ வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு புறம் இருக்க புக் மை ஷோ செயலியில், லியோ திரைப்படத்திற்கு 70 லட்சம் டிக்கெட்டுகள் விக்கெட் தீர்ந்து இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி திரைப்படங்களிலேயே இதுதான் அதிகபட்ச சாதனை என்று கூறப்படுகிறது. இதனை புக் மை ஷோ செயலியின் சிஇஓவை அறிவித்துள்ளார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை லியோ படத்தில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.





