நடிகர் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து பட்டியல் படத்தை இயக்கினார். அடுத்து அஜீத்குமார் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் நடிகர் முரளி மகன் ஆகாஷ் முரளி அறிமுகமான நேசிப்பாயா படத்தையும் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார்.
நேசிப்பாயா படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல் தனது பில்லா ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனுக்கு மீண்டும் ஒரு படம் தர நடிகர் அஜீத்குமார் அழைத்த போது, அவர் வர மறுத்துவிட்டார்.
ஏனெனில் அப்போது இந்தியில் நடிகர் சல்மான் கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் ஆர்வத்தில் அதற்கான முயற்சிகளில் விஷ்ணுவர்தன் தீவிரம் காட்டி வந்தார். அதனால் அஜீத்குமாரை வலிய அழைத்தும் அவர் வர மறுத்த பிறகு அஜீத்குமார் அவரை அலட்சியப்படுத்தி விட்டார். அதன்பிறகு 2 3 முறை அஜீத்குமாரை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அஜீத் அவரை நிராகரித்து விட்டார்.
எப்போதுமே தனக்கு வெற்றிப் படங்களை தரும் இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து தனது நடிப்பில் 3 படங்களை இயக்க வாய்ப்பு தருவது அஜீத்குமாரின் வழக்கம். அதன்படிதான் சிறுத்தை சிவா எச் வினோத் போன்றவர்கள் அதிக படங்களை இயக்கினர். அதே போல் விஷ்ணுவர்தனும் அஜீத்குமார் நடிப்பில் பில்லா ஆரம்பம் ஆகிய 2 படங்களை இயக்கினார்.
இப்போது நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். சிறுத்தை சிவா வெங்கட்பிரபு மகிழ் திருமேனி ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் தனுஷ் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் நடிகர் அஜீத்குமார் படங்களை இயக்கும் லைன் அப்பில் இருந்து வருகின்றனர். இதில் எல்லா இயக்குனர்களுக்கும் அஜீத்குமார் வரிசையாக வாய்ப்பு தருவார் என்று கூறப்படுகிறது.
இதில் பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிகர் அஜீத்குமார் ஒரு புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் அவர் முதன்முறையாக நடிக்க உள்ளார். இதுவரை அஜீத்குமார் நடிக்காத ஒரு பேண்டஸி கதையை இயக்குனர் விஷ்ணுவர்தன் உருவாக்கி வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ்நாட்டு மன்னன் மீண்டும் பிறவி எடுத்து தான் வாழ்ந்த இடத்துக்கு வருவதுதான் கதைக்களம். அது தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் கதை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





