தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். பல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகர்களில் ஒருவராக அஜீத்குமார் இருந்து வருகிறார். அவரது நடிப்பில் விடாமுயற்சி படமும், அதை தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் வெளிவர இருக்கிறது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். துணிவு படத்துக்கு பிறகு ஏறக்குறைய 2 ஆண்டுகள் கழித்து அஜீத்குமார் படம் வெளியாகிறது.
யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன். இசைஞானி இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா என்ற மூத்த மகனும் இருக்கிறார். அவரும் சில படங்களில் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் மகள் பவதாரணி பல ஹிட் பாடல்களை பாடியவர். சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் பவதாரணி காலமானார்.
யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பிரபலமான இசையமைப்பாளர். அவரது பாடல்களை, இசையை ரசிக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. பல வெற்றி படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்துக்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பல படங்கள் எதிர்பார்க்க வெற்றியை பெறவில்லை. அவரது இசையமைப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை, இதனால் யுவன் சங்கர் ராஜா இசையமைத்தால் அந்த படம் ஓடாது என்ற ஒரு மோசமான சென்டிமென்ட் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவியது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறுகையில், நான் ராசி இல்லாத இசையமைப்பாளர் என்றும் என்னால்தான் படங்கள் தோல்வியடைகிறது என்றும் கூறி ஒரு கட்டத்தில் என்னை ஒதுக்கி விட்டார்கள். அப்போது நடிகர் அஜீத்குமார் என் வீட்டிற்கு வந்து அவர் நடிக்கும் தீனா என்ற திரைப்படத்தில் நான் இசையமைக்க வேண்டும் என்றும், என் திறமையை இதன் மூலம் காட்ட வேண்டும் என்று கூறினார். அந்த படம் எனக்கு ஒரு காம்பேக் படமாக அமைந்தது என்று கூறியிருக்கிறார்.
அஜீத்குமார், லைா நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்தன. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இசையமைக்க பட வாய்ப்புகள் இல்லாமல், ராசில்லாத இசையமைப்பாளர் என்று ஒதுக்கப்பட்ட சூழலில், தனக்கு நடிகர் அஜீத்குமார் தான் தீனா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்து தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு அளித்தார் என்று இந்த நிகழ்ச்சியில், யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.





