- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட் - இனி நான் அந்த இளம் ஹீரோவை வைத்து...

கருப்பு படம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட் – இனி நான் அந்த இளம் ஹீரோவை வைத்து படம் செய்வதா? ஈகோவால் முடிவை மாற்றிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர் ஆர்ஜே பாலாஜி. பிறகு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராகவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். நான் ஸ்டாப்பாக அவர் வேகமாக பேசும் ஸ்டைல்தான் மக்கள் மத்தியில் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் தேவி நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோல்களில் நடித்த ஆர்ஜே பாலாஜி அதன் பிறகு எல்கேஜி படம் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தை டைரக்ட் செய்தார். இந்த படம் 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் பிளாக் பஸ்டர் வெற்றியை கொண்டாடியது. இதற்கிடையே இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, குட் நைட் லவ்வர் குடும்பஸ்தன் போன்ற படங்களில் நடித்த வளரும் இளம் நடிகர் மணிகண்டனை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்ய கமிட் ஆனார்.

ஆனால் இப்போது கருப்பு படம் தந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மணிகண்டன் போன்ற வளரும் இளம் நடிகரை வைத்து படம் செய்ய இயக்குனர் ஆர்கே பாலாஜியின் ஈகோ இடம் தரவில்லை. அதனால் அந்த படத்தை தவிர்த்து விட்டு நடிகர் சூர்யாவை போல பெரிய நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் திட்டத்தில் ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் படம் பண்ணவும் அவர் முயற்சித்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அல்லு அர்ஜூன் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு படம் பண்ண அவர் காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் அவரே இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கவும் ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். ஒரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவுடன் தொடர்ந்து இயக்குனராக களத்தில் இருந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஆனால் ஒரு படம் ஹிட் ஆனவுடன் மீண்டும் நடிப்பில் இறங்குவது ஆர்ஜே பாலாஜிக்கு சாதகமாக அமையுமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் நடிகர் மணிகண்டன் இதுவரை நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் அமோக வசூலையும் பெற்ற வெற்றி படங்களாக இருக்கின்றன. அதனால் மணிகண்டன் போன்ற ஒரு நல்ல நடிகரை தவிர்த்து விட்டு புது முயற்சிகளில் ஆர்ஜே பாலாஜி இயங்குவது அதுவும் ஈகோ காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள் அவருக்கு பாதகமாக கூட முடியலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சற்று முன்