நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் இதனை தயாரிக்கிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தன்னை அஜித்தின் தீவிர ரசிகர் என்று கூறிக் கொள்ளும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் அந்த திரைப்படத்தில் தான் தனது இயக்கத்தின் முழு திறமையை ஆதிக் வெளிப்படுத்தி இருந்தார். டைம் ட்ராவல் கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர் கொடுத்திருந்தார்.
அந்தப் படம் கொடுத்த மாபெரும் வெற்றியே தற்போது அவரை அஜித்துடன் இணைய வைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு இருக்கிறார். அதுபோக அவர் அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரமும் கொடுத்திருக்கிறார்.
இதனை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இடையே நாம் பார்த்திருப்போம். அஜித் மூன்று கேரக்டரில் இருப்பது போல் அந்த போஸ்டர் இடம் பெற்றிருந்தது. கலர் கலரான சட்டை, கையில் டாட்டூ, நடுவிரலை காட்டுவது என ஒரு அதகளமான அஜித்தை நம்மால் பார்க்க முடிந்தது. தீனா படத்தில் தோன்றியது போல் காதில் கடுக்கனுடன் அஜித் இதில் காணப்படுகிறார்.
இதற்கான சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்தப்படுகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பக்கத்து அரங்கில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சூட்டிங் ஒன்று நடந்து கொண்டு இருக்க அங்கு அஜித் சென்று இருக்கிறார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கில் பிரேம புஸ்தகம் மூலம் தான் அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அப்போது சிரஞ்சீவியுடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் தற்போது உள்ள போட்டோவையும் ஒன்றாக சேர்ந்து ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





