- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை திருமணம் செய்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை... மனைவி ஷாலினியை முதல் முறையாக பார்த்தது...

அவரை திருமணம் செய்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை… மனைவி ஷாலினியை முதல் முறையாக பார்த்தது குறித்து மனம் திறந்த அஜித்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக அஜித் குமார் ஷாலினி தம்பதியர் உள்ளனர். அமர்க்களம் படத்தில் அஜித்குமார் மற்றும் ஷாலினி இருவரும் சேர்ந்து நடிக்க, அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதற்குப் பெற்றோர் பச்சை கொடி காட்டிய நிலையில், 2000 ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

- Advertisement -

இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, வெற்றி தோல்வி என அனைத்தையும் பார்த்து விட்ட அஜித்குமார் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

 

- Advertisement -

மற்ற நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரு வாரம் எடுக்கும் வசூலை, அஜித்தின் திரைப்படங்கள் வெறும் இரண்டு நாட்களே பார்த்து விடும். அந்த அளவுக்கு இளைஞர்கள் பட்டாளம் அஜித் பக்கம் இருக்கின்றனர். தற்போது அஜித்குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு மற்றொரு திரைப்படத்திற்கும் மிகப்பெரிய இடைவேளை விடும் அஜித், அந்த சமயங்களில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது விளையாடுவது என பொழுதை கழித்து வருகிறார். இந்த நிலையில், அஜித் ஷாலினி தம்பதி திருமணம் முடிந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க, அவர்கள் தங்களது கல்யாண நாளை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக கொண்டாடினர்.

 

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் தனது மனைவி ஷாலினி குறித்து அஜித் பேசிய பழைய வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஒரு வீடியோவில், அவர் தனது மனைவியை முதல்முறையாக பார்த்தது குறித்து பேசி இருக்கிறார்.

 

1986 அல்லது 87வது ஆண்டாக இருக்கும். அப்போது மந்தைவெளியில் நான் தங்கி இருந்தேன். ஒரு பால்கனியில் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது, கீழே அர்ஜுன் சார் நடித்த சங்கர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். அந்த நாளை மறக்கவே முடியாது. பின்னாளில் அவர் தான் என் மனைவியாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பேசியிருக்கிறார். தற்செயலான இந்த நிகழ்வை அஜித் கூறியதை கேட்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்