- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பு நிறுவனத்தை கதற விட்ட இந்தியன் தாத்தா, 8 நாட்களில் உலகம் முழுவதும் மொத்த வசூல்...

தயாரிப்பு நிறுவனத்தை கதற விட்ட இந்தியன் தாத்தா, 8 நாட்களில் உலகம் முழுவதும் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

ஒரு நல்ல படம், அதற்கான வெற்றியை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்கள் தானாகவே வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த படங்களுக்கு பிரமோ தேவையே இல்லை. படம் பார்த்த ரசிகர்களே விளம்பரதாரர்களாக மாறி, அடுத்தவர்களிடம் சொல்லி தியேட்டர்களுக்கு வரச் செய்து விடுகிறார்கள்.

அப்படிதான் மகாராஜா, குட்நைட், காக்கா முட்டை, மஞ்சும்மெல் பாய்ஸ், பிரேமலு, காந்தாரா, புஷ்பா, சித்தா, லவ்டுடே போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி பெற்றன. இந்த படங்கள் ரசிகர்களால் விரும்பி ஏற்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.

- Advertisement -

ஆனால் லைகா புரடக்சன்ஸ் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரமாண்ட இயக்குனர் என இந்திய அளவில் கவனிக்கப்படும் டைரக்டர் ஷங்கர், உலக நாயகன் என போற்றப்படும் கமல்ஹாசன், ராக் ஸ்டார் என புகழப்படும் இசையமைப்பாளர் அனிருத் என இருந்தும் இந்தியன் 2 படம், மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

இந்தியன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தின் 2ம் பாகமாக தான், இந்தியன் 2 வெளிவந்தது. இந்தியன் படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனமும் இப்போதும் பார்த்து பார்த்து ரசிக்க முடிகிறது. ஆனால் அந்த படத்தின் தொடர்ச்சியாக, எடுக்கப்பட்ட இந்தியன் 2 படம், அந்தியன் 2 படம் போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். கமல் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், அது திரைக்கதைக்கு பொருந்தவே இல்லை என்று புலம்புகின்றனர்.

- Advertisement -

இந்தியன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். அந்த படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட் ஆனது. அந்த பாடல்களின் இனிமையும், பரவசமும், துள்ளலும் இப்போதும் ரசிக்க முடிகிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஆனால் இந்தியன் 2 படத்தில் எந்த பாடலுமே ரசிகர்களை கவரவில்லை.

இந்தியன் 2 படத்தின் நீளம் மூன்று மணிநேரம் என்பதில், 11 நிமிடங்களை குறைத்தாலும், கொட்டாவி விடும் ரசிகர்கள் குறையவில்லை. அதனால் இந்தியன் 2 திரையிட்டுள்ள தியேட்டர்களில் காற்று வாங்குகிறது. கடந்த 12ம் தேதி இந்தியன் 2 ரிலீஸான நிலையில், உலகம் முழுவதும் 8 நாட்களில் படம் வசூலித்தது மொத்தம் ரூ. 146 கோடிகள் மட்டுமே. இந்தியன் தாத்தா, படம் பார்க்க வந்த ரசிகர்களை மட்டுமின்றி, படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்தையும் கதற விட்டு விட்டார்.

- Advertisement -

சற்று முன்