- Advertisement -
Homeபொழுதுபோக்குபிகினி ஆடை அணிவதில் என்ன தப்பு? ஆவேசமான நடிகை மாளவிகா மோகனன்- சர்ச்சைக்கு பதிலடி...

பிகினி ஆடை அணிவதில் என்ன தப்பு? ஆவேசமான நடிகை மாளவிகா மோகனன்- சர்ச்சைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பாருங்க!

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் தமிழ் மலையாளம் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்ற போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களை விமர்சித்தவர்களுக்கு அவர் தற்போது பதிலடி தந்திருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகன் தற்போது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து தி பாக்கெட் நாவல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாகவும் அவர் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்த நிலையில் தி பாக்கெட் நாவல் படப்பிடிப்புக்கு இடையே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன் அங்கு எடுத்த தனது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

பிகினி உடையில் அவரது கவர்ச்சியான உடல் பாகங்கள் தெரியும் நிலையில் இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலான நிலையில் பலர் அவரது அழகான தோற்றத்தை ரசித்து பாராட்டினர். அதே நேரத்தில் அவர் பிகினி உடை அணிந்திருந்தது குறித்தும் கடுமையான விமர்சனங்களையும் ஒரு தரப்பினர் பதிவு செய்தனர்.

- Advertisement -

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது, பிகினி அணிவதில் என்ன தவறு இருக்கிறது? வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்கு தெரியும். எனவே எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை மாளவிகா மோகனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அந்த புகைப்படங்களை பார்த்து மெய்சிலிர்த்து விட்டேன் சூப்பர் என்றும் சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வாழ்த்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்