- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தில் இருந்து தரமான செய்கை ஒன்று காத்திருக்கு... என்னப்பா ஏ கே ஃபேன்ஸ் போவோமா...

விடாமுயற்சி படத்தில் இருந்து தரமான செய்கை ஒன்று காத்திருக்கு… என்னப்பா ஏ கே ஃபேன்ஸ் போவோமா…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதமே வெளியானது. அஜித்தின் பிறந்த நாளான அன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட லைக்கா தயாரிப்பு நிறுவனம், இதனை மகிழ்திருமேனி இயக்குவதாக தெரிவித்தது.

அதுமட்டுமில்லாமல் படத்திற்கு விடாமுயற்சி என்றும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் எத்தனை காலம் தான் வி வரிசையிலே அஜித் படத்திற்கு டைட்டில் வைப்பார்கள் என்று ரசிகர்கள் சற்று அலட்டிக் கொண்டனர். ஆனால் இதையெல்லாம் தயாரிப்பு நிறுவனம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

- Advertisement -

குறிப்பாக அஜித்தின் ஆசைப்படியே இந்த வி வரிசையில் டைட்டில் வைக்கப்பட்டதாக அப்போது பேசப்பட்டது. இப்படியான சூழலில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அஜித்தும் பைக் டூர் சென்றதால் ஒருவேளை படம் கைவிடப்பட்டு விட்டதோ என்றெல்லாம் பேச்சு எழுந்தது.

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் இது நாள் வரை அது குறித்து எந்த ஒரு அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதுவும் படப்பிடிப்பு தளத்தில் இவர்களின் புகைப்படம் வெளியானதாலேயே இது உண்மை என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இதே போல் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டாலும், அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வரை வெளியாகவில்லை.

விடாமுயற்சி படத்தின் அப்டேட் இப்படி ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டிருக்க, அஜித் ரசிகர்களும் பெரிதாக கேள்வி கேட்காமல் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில், நாளை விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது கண்டிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் வரும் நாட்களிலும் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்