லைக்கா நிறுவனம் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இது படமாக்கப்படத் திட்டமிடப்பட்டது. விடாமுயற்சி படம் தொடர்பான அறிவிப்பை, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது
ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலேயே, விடாமுயற்சியின் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா நடிப்பதை ரசிகர்கள் உறுதி செய்தார்கள்.
இதன் அப்டேட் கொடுத்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்க, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காட்சியை அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா வெளியிட்டார். இதைப் பார்த்து பதறிப் போன அஜித் ரசிகர்கள் இனிமேல் அப்டேட் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டனர். இந்த நிலையில் விடாமுயற்சிக்கு அனிருத் இசையமைப்பதும் சுரேஷ் சந்திரா கூறி தான் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தடைபட்டுள்ளது. இந்த சமயத்தில் அஜித், தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். குட் பேட் அக்லி எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஹைதராபாத்தில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் விடாமுயற்சி பட குழுவும், அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளது. படத்தில் பணியாற்றும் மற்ற குழுவினர் ஜூன் முதல் வாரம் அங்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்திற்கு பிறகு குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் நடைபெறுகிறது.
இதனால் ரஷ்யாவிற்கு செல்லும் அஜித்குமார், அங்குள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஜர்பைஜான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அனேகமாக ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் அஜித் குமார் ரஷ்யாவிற்கு பயணம் ஆவார் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு படத்தைக் கொண்டு வர முழு வீச்சில் விடாமுயற்சி படக் குழு ஈடுபட்டு வருகிறதாம். இதன் முன்னோட்டமாக, ஜூலை மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆகஸ்ட் மாதத்தில் விடாமுயற்சி சூட்டிங் முடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





