- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்ததாக ஓமனில் பைக் ஓட்டும் அஜித்... இவரு இன்னும் திருந்தல மாமா என உச்சு கொட்டும்...

அடுத்ததாக ஓமனில் பைக் ஓட்டும் அஜித்… இவரு இன்னும் திருந்தல மாமா என உச்சு கொட்டும் ஏ கே ரசிகர்கள்…

- Advertisement -

துணிவு திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, அஜித்தின் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனை நானும் ரவுடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பட நிறுவனத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், ஏ கே 62-லிருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.

இதன்பிறகு அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த அவர், தடையறத் தாக்க, தடம், மீகாமன் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதனால் அஜித் மகிழ் திருமேனி கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

- Advertisement -

முதலிலேயே படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் பெயர் வைத்த ராசியோ என்னவோ, படத்திற்கான சூட்டிங்கிற்கு மட்டும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. தயாரிப்பு நிறுவனம் தயாராகி இயக்குனர் பிக்ஸ் செய்யப்பட்டாலும், அஜித் குமார் பைக் எடுத்து ஊரெல்லாம் சுற்றியதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த படக்குழுவினரும் விழி பிதுங்கினர்.

இது ஒரு பக்கம் இருக்க விடா முயற்சி வீண் முயற்சி ஆகிவிட்டது என்றும், படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு தரப்பு பேசியது. இதனை முற்றிலும் மறுத்த தயாரிப்பு நிறுவனம், விரைவில் சூட்டிங் தொடங்கும் என்று அறிவித்தது.

- Advertisement -

துபாயில் தொடங்கும் படப்பிடிப்பிற்காக மகிழ் திருமேனி அங்கு முகாமிட்டார். கிட்டத்தட்ட அங்கு 90 சதவீத படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்பட்டது. இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளாராம். அதுபோக சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் விடாமுயற்சியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த மாத இறுதியில் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்படியான நேரத்தில் தான் மீண்டும் பைக்கை தொட்டு இருக்கிறார் ஏ கே. துபாயில் இருந்து ஓமன் பக்கத்தில் தான் இருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ, பைக்கை தூக்கிக்கொண்டு அந்நாட்டிற்கு கிளம்பி இருக்கிறார். இது தொடர்பாக ரசிகர் ஒருவர் அவரிடம் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. சூட்டிங்கிற்கு நாள் குறித்த பிறகும், ஏகே இப்படி ஊர் சுற்றுவதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்