நடிகர் பப்லு, கே பாலசந்தர் இயக்கத்தில் வானமே எல்லை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பாண்டியநாட்டு தங்கம், அவள் வருவாளா, ராமன் அப்துல்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதில் சில படங்களில் வில்லனாக பப்லு நடித்திருந்தார். பப்லு குழந்தை நட்சத்திரமாக நாளை நமதே, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் குழந்தை நட்சத்திரமாக 4 சுவர்கள் என்ற படத்தில் அறிமுகமானவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் பப்லு நடித்திருக்கிறார். பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் ரன்வீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக மிகவும் இழிவாக பேசப்பட்ட படமாகும்.
அதுமட்டுமின்றி பப்லு ஜெயா டிவியில் 15 ஆண்டுகளுக்கு முன் சவால் என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலமும் மிக பிரபலமானவர். ஊர் ஊராகச் சென்று சாகசம் காட்டும் மனிதர்களை நேரில் சென்று அவர்கள் செய்துகாட்டும் சாகசங்களை மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய ஆதரவை, வரவேற்பை பெற்றது.
நடிகர் பப்லு பிருத்விராஜூக்கு மனைவி மற்றும் ஆட்டிசம் பாதித்த மகனும் உள்ளனர். எனினும் குடும்பத்தை விட்டு தனித்து வாழ்ந்து வந்த நிலையில், 24 வயது பெண் ஒருவருடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்தது பெரிய அளவில் வைரலானது. ஆனால் அவருடன் ஓராண்டுக்கு மேல் அவரது உறவு நீடித்த நிலையில், பிறகு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ராதிகா குறித்து பப்லு பிருத்விராஜ் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா ஒரு ஒளவையார். அவருக்கு என்ன 100 வயசு இருக்குமா, அவருக்கு புருஷனா வாணி ராணி சீரியலில் நான் நடித்ததுதான் நான் செய்ததில் பெரிய தவறு.
ஒருநாள் ஜிம்மில் நான் இருந்த போது, அங்கிருந்த ஒருவர் என்னை பார்த்து தாத்தா நடிகர் என்று கலாய்த்தார். யாரைப் பார்த்து தாத்தா நடிகர்ன்னு சொல்றே, என்று நான் கோபமாக அவரிடம் கேட்டேன். உடனடியாக அவர், நீ ராதிகாவுக்கு புருஷனா நடிச்சவன்தானே என்று என்னை பார்த்து கமெண்ட் அடித்தார் என்று பப்லு கூறியிருக்கிறார்.





