நடிகர் விஜய் நடித்த லியோ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம் குறித்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் ரூ. 600 கோடி வரை சாதனை படைத்திருக்கிறது. அதனால்தான், படம் வெளியான 12 நாட்களில் படத்தின் வெற்றிவிழாவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இப்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 68 படம், ஆக்சன் படமாகவும் குடும்ப சென்டிமென்ட் உள்ள படமாகவும் கமர்ஷியலாக எடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜயை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்தே கடுமையான உழைப்பாளியாக பெயர் பெற்றவர். பல படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இப்போதும் லியோ படத்தில் ஹய்னாவுடன் மோதும் ஆரம்ப காட்சிகளில் ஹய்னா இல்லாவிட்டாலும், அந்த மைனஸ் டிகிரி குளிரில் ஒரு சர்ட் மட்டுமே அணிந்து மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஓட்டுப்போட ஜனநாயக உரிமை இருப்பது போல, அரசியலுக்கு வருவதும் அவரவர் உரிமை என பலரும் கூறி வருகின்றனர். இதுவும் ஏற்றக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது.
லியோ படத்துக்கு விஜய் பெற்ற சம்பளம் ரூ. 125 கோடி என்ற நிலையில், இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய் பெற்ற சம்பளம் ரூ. 200 கோடி. ஆனால், முந்தைய படங்களை போல இந்த படத்தில் விஜய் சரியான ஒத்துழைப்பும், இன்வால்வ்மென்டும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் தேவையான காட்சிகளுக்கு மட்டும் குளோசப் வைத்து எடுத்து விடுங்கள். மற்றவை எல்லாவற்றுக்கும் டூப் போட்டு எடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் விஜய். கார் சேஸிங் காட்சிகளிலும், நிற்பது, நடப்பது போன்ற காட்சிகளில் கூட டூ்ப்பை பயன்படுத்திக்குங்க, என்கிறாராம். அரசியலுக்கு வரும் கெத்துவில் இருக்கும் விஜய், படப்பிடிப்பு தளத்தில் வழக்கம்போல் இல்லாமல் ஓவராக பந்தா காட்டுவதால், படக்குழுவினர் நொந்து போய் இருக்கின்றனர். அதிலும் இயக்குநர் வெங்கட்பிரபு, செய்வதறியாது திகைத்து இருக்கிறார்.





