- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி ஷூட்டிங்கில் திடீர் பிரேக் - 5 நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பிய படக்குழு -...

விடாமுயற்சி ஷூட்டிங்கில் திடீர் பிரேக் – 5 நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பிய படக்குழு – மன உளைச்சலில் தவித்த டைரக்டர் மகிழ் திருமேனி

- Advertisement -

கடந்த அக்டோபர் 4ம் தேதி, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜீத்குமார், டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழு சென்னையில் இருந்து அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடத்தப்பட்டது. இன்னும் சில காட்சிகள் துபாயில் படம்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜனவரி 30ம் தேதி வரை நான் ஸ்டாப் ஷூட்டிங் நடத்த பிளான் செய்திருந்த நிலையில்,கடந்த சனிக்கிழமை விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு, விடாமுயற்சி படம் ஷூட்டிங் துவங்குவதாக இருந்த நிலையில், அஜீத்குமார் அப்பா காலமானதால், சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன், அஜீத்குமாரை இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், அவரது கதை பிடிக்கவில்லை என அஜீத்குமாரே நிராகரித்தார்.

தொடர்ந்து உலக பைக் டூர் சென்ற அஜீத்குமாரால் மேலும் சில மாதங்கள் படப்பிடிப்பை துவங்க காலதாமதம் ஏற்பட்டது, வாரிசு படத்தை அடுத்து, விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆகி 40 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வாரிசு படமும், துணிவு படமும் ஒரே சமயத்தில்தான் ரிலீஸ் ஆனது. அப்படியிருக்க விஜய் படம் ரிலீஸ் ஆகி, அஜீத் படம் வராதது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

அதனால் இந்த படப்பிடிப்பை இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி, மே 1ம் தேதி, அஜீத்குமார் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கிடையே படப்பிடிப்பை தொடர முடியாமல், விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது.

அதாவது, விடாமுயற்சி படத்தின் டைரக்டர் அவ்வப்போது தன்னை ரிலாக்ஸ் செய்துக்கொண்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, ரெப்ரெஷ் செய்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்துவது வழக்கம். தொடர் படப்பிடிப்பால் அவருக்கு மன உளைச்சலே ஏற்பட்டிருக்கிறது. இதை அஜீத்குமாரிடம் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன் உரிமையாளர் சுபாஷ்கரனிடம் தெரிவிக்க, அவர் ஓகே சொல்லி இருக்கிறார். அதனால், சென்னையில் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்க, மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார்.

சற்று முன்