- Advertisement -
Homeபொழுதுபோக்குAK 63 படத்தின் இயக்குனர் அவரேதான்? என்னது,மீண்டும் மீண்டுமா?

AK 63 படத்தின் இயக்குனர் அவரேதான்? என்னது,மீண்டும் மீண்டுமா?

- Advertisement -

அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

“விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. ஆனால் அதன் பின் பல நாட்கள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் வெளிவந்த பிறகு இத்திரைப்படம் டிராப் ஆகிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் லுக் டெஸ்ட்டிற்காக லண்டன் சென்ற செய்தி வெளியான பின்பு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்தது.


“விடாமுயற்சி” திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வருகிறது. அதே போல் இத்திரைப்படம் ஒரு ரொமான்டிக் ஆக்சன் படமாக உருவாக உள்ளதாம். இத்திரைப்படத்தின் பெருவாரியான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில் தற்போது அஜித்தின் 63 ஆவது திரைப்படத்தை குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது அஜித்குமார் தனது 63 ஆவது திரைப்படத்தில் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சிறுத்தை சிவா இதற்கு முன் அஜித்தை வைத்து, “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்”, “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களை கொடுத்தவர். அஜித்தின் விருப்பமான பட்டியலில் இருக்கக்கூடிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது சூர்யாவை வைத்து “கங்குவா” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

 

- Advertisement -

சற்று முன்