- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸை மலை போல நம்பிய சிவகார்த்திகேயன், கடைசி நேரத்தில் திடீர் வில்லனாக முளைத்த பாலிவுட்...

ஏஆர் முருகதாஸை மலை போல நம்பிய சிவகார்த்திகேயன், கடைசி நேரத்தில் திடீர் வில்லனாக முளைத்த பாலிவுட் ஸ்டார் – அப்செட் ஆன எஸ்கே

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது காமெடி ஷோ மூலம், தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தனது காமெடி கலந்த அறிவுக் கூர்மையான பேச்சால் சிவகார்த்திகேயன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு சினிமா நடிகர்களை நேர்காணல் செய்தார். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்களை தொகுத்து வழங்குபவர்களில் ஒருவராக இருந்தார்.

நாளடைவில், விஜய் டிவி தந்த பிரபல வெளிச்சத்தால் மெரினா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, காக்கிசட்டை, வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.

- Advertisement -

இதற்கிடையே இசையமைப்பாளர் டி இமான் சொன்ன குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயன் இமேஜ் டேமேஜ் ஆனது. எனினும் நாளடைவில் அது ரசிகர்களிடம் இருந்து அந்த விவகாரம் மறைந்து போனது. இந்த சூழலில் அயலான் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஏலியன் நடித்தும் படம் ஏமாற்றத்தை தந்தது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் மிக பெரியதாக எதிர்பார்த்திருக்கும் படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தையும், தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேகன் நடித்து வரும் புதிய படத்தையும்தான். ரஜினி நடித்த தர்பார் என்ற மாபெரும் பிளாப் படத்துக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏற்கனவே பிளாப் படங்களை தந்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், கஜினி, கத்தி, ரமணா, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் பெரிதாக நம்பியிருக்கிறார். அதே போல், தர்பார் தோல்விக்கு பிறகு ஏஆர் முருகதாஸ்க்கும் சிவகார்த்திகேயன் படம் மிக முக்கியமானதாகும்.

இந்நிலையில், பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க, ஏற்கனவே டைரக்டர் ஏஆர் முருகதாஸ் கமிட் ஆகியிருப்பதால், இன்னும் 15 தினங்களில் பாலிவுட் ஷூட்டிங் வருமாறும், அதற்குள் சிவகார்த்திகேயன் படத்தை முடித்து விடுமாறும் அவர்கள் நெருக்கடி தந்துள்ளனர். இதனால் 30 நாள் படத்தை 15 நாட்களுக்குள் முடிக்க முருகதாஸ் முயற்சிப்பதால், சிவகார்த்திகேயன் படம் பினிஷிங் சரியா வருமா, இந்த படத்தை அவசர அவசரமாக முடிக்க சல்மான்கான் வில்லனாக மாறிவிட்டாரே என்று தமிழ் சினிமா ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்