- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு இத்தனை கதாபாத்திரங்களா... தகவலைக் கேட்டு வாய் அடைத்துப் போன ரசிகர்கள்......

அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு இத்தனை கதாபாத்திரங்களா… தகவலைக் கேட்டு வாய் அடைத்துப் போன ரசிகர்கள்… ஏங்க உண்மையிலேயே இது வேற சம்பவங்க…

- Advertisement -

இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டெட் நடிகராக மாறி இருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களும் கொடுத்த வெற்றி அவரை சிகரத்தின் உச்சியில் அமர வைத்திருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு மார்க்கெட்டை தாண்டி தமிழ் கன்னடம் இந்தி என அனைத்து திரை உலகிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதனை அதிகம் கூட்டும் வகையிலேயே அல்லு அர்ஜூன் தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் இயக்குனரை தேர்வு செய்திருக்கிறார். இதில் அட்லியின் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தமிழில் விஜயை வைத்து ஹேட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லி, இந்தி சினிமாவுக்கு பயணித்து ஷாருக் கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அங்கு மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல அட்லி யார் என்பதையும் இந்திய சினிமாவே அறிந்தது.

இதனைத் தொடர்ந்து அட்லியின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில் தற்போது இந்த பிரம்மாண்டமான கூட்டணி கைகோர்த்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக பொருட்செலவில் இந்த திரைப்படத்தை எடுக்க தான் திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் அட்லி. போர் சம்பந்தப்பட்ட காலம் மற்றும் அறிவியலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்கு வி எப் எக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கும் என்பதால், அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் வெளிநாடுகளுக்கு பயணமாகி அது தொடர்பான பணிகளை மேற்கொண்டனர்.

படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பது அது தொடர்பான வீடியோ வெளியாகும் போது உறுதிப்படுத்தப்பட்டது. இதுபோக, மூன்று கதாநாயகிகள் படத்தில் இருக்கிறார்களாம். இதில் ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் படத்தில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

இப்படியான சூழலில், படத்தில் அல்லு அர்ஜுன் நான்கு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தாத்தா, தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறாராம். இரு வெவ்வேறு உலகங்களில் இந்த திரைப்படம் நடப்பது போன்று கதையை வடிவமைத்து இருக்கிறாராம் அட்லி. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்