- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2ம் பாகம் மட்டுமல்ல, 3ம் பாகமும் வருது, பின்னாடியே 4ம் பாகமும் வருது, மீண்டும்...

விடுதலை 2ம் பாகம் மட்டுமல்ல, 3ம் பாகமும் வருது, பின்னாடியே 4ம் பாகமும் வருது, மீண்டும் ஷூட்டிங் நடத்த தயாரான இயக்குனர் வெற்றிமாறன் – இப்போ எத்தனை மாதம் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக ரசிகர்களால் கவனிக்கபடுபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தனுஷ் நடித்த அந்த படத்தில் தனி முத்திரை பதித்தார். தொடர்ந்து ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை என அசத்தினார்.

காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக்கி வெற்றி மாறன் இயக்கிய படம் விடுதலை. இதில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சேத்தன். கெளதம் மேனன், தமிழ், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, வெற்றிப்படமாகவும் அமைந்தது.

- Advertisement -

விடுதலை படம் தந்த அபரிமிதமான வெற்றியால் அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, கருடன் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்திலும் சூரி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வரவேண்டிய விடுதலை 2ம் பாகம் படம் இன்னும் படப்பிடிப்பு முடிவடையாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக்கொண்டே போகிறது. இதுவரை வெற்றிமாறன் எடுத்த வகையில், 6.5 மணி நேரம் ஓடக்கூடிய வகையில் படத்தின் புட்டேஜ் இருக்கிறது. அதனால் 2ம் பாகம் மட்டுமல்ல, 3ம் பாகமும் வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு வெற்றிமாறன் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இப்போது 2 மாதங்கள் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன், படத்தின் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் மஞ்சுவாரியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் 2 நாட்கள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஏராளமான காட்சிகள் அவரை வைத்து படம்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இப்போதே 6.5 மணி நேரம் புட்டேஜ் உள்ள நிலையில், வெற்றிமாறன் இன்னும் 2 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தினால் படத்தின் புட்டேஜ் 8.5 மணி நேரமாக மாறிவிடும். அதனால் விடுதலை 2ம் பாகம் மட்டுமல்ல, 3ம் பாகம் வரும், அதைத்தொடர்ந்து 4ம் பாகமும் நிச்சயமாக வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தியன் 2, இந்தியன் 3 என இயக்குனர் ஷங்கர் சொதப்பியது போல் வெற்றிமாறன் சொதப்பாமல் இருந்தால் சரிதான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்