இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாத்துறையை தமிழ் ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு மனோஜ் குமார் என்ற மகன் ஜனனி என்ற மகள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் மனோஜ் குமார் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்தார். இதனால் பாரதிராஜா மனதளவில் மிகவும் உடைந்து போனார்.
வெளிநாட்டில் தனது மகள் ஜனனி வீட்டிலும் 6 மாதங்கள் வரை இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு வந்துவிட்டார். கடந்த ஓராண்டாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த பாரதிராஜா சென்னையில் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரது இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறு மற்றும் சொத்து பிரச்னை தொடர்பான இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவரது உடல் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலகுண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சண்டை சச்சரவுகளும் பிரச்னைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
வத்தலகுண்டு பண்ணை வீட்டில் நடந்த இறுதி சடங்கின் போது பாரதிராஜாவின் மகள் ஜனனி மற்றும் மறைந்த நடிகர் மனோஜின் மனைவி நந்தனா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது நடிகை ராதிகா சரத்குமார்தான் ஜனனியை சமாதானப்படுத்தி பிரச்னையை தடுத்தார். இந்த விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, பாரதிராஜாவுக்கு 500 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருக்கின்றன.
மேலும் அந்த சொத்துக்கள் தொடர்பாக அவரது குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் பிரச்னைகள் இருந்து வருகின்றன.மனோஜ் மறைந்த பிறகு பாரதிராஜா வெளிநாட்டில் தனது மகள் வீட்டில் இருந்த போது சில சொத்துக்களை மகள் ஜனனி பெயருக்கு மாற்றி எழுதி தந்து விட்டார். மனோஜின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி நந்தனாவுக்கு, மாமனார் என்ற முறையில் பாரதிராஜாவின் சொத்துக்கள் செல்வதை மகள் ஜனனி விரும்பவில்லை.
அவரது இந்த நிலைப்பாடு தற்போதைய மோதல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு சொந்தமான அபார்ட்மெண்ட்டில் நந்தனா தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரை அந்த வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.





